துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.
வீரவநல்லூர்: நவம்பர் 27ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் சிறப்பாக நடைபெற்றது.
வீரவநல்லூர் பேரூர் கழக செயலாளர் சுப்பையா தலைமையில், பேரூராட்சி மன்ற தலைவி சு.சித்ரா மற்றும் துணைத் தலைவர் வசந்த சந்திரா முன்னிலையில், ஆதரவற்ற முதியவர்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வீரவநல்லூர் துணை செயலாளர் முத்து ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி,அண்ணாதுரை, சுப்பு குட்டி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுபாஷ், மகளிர் அணி துணை அமைப்பாளர் தாமரைச்செல்வி, செல்லத்துரை, வார்டு செயலாளர் அடைக்கலம் கலந்து கொண்டனர்.அதன் பிறகு அண்ணா சிலைக்கு க

ழக முன்னோடி முத்துகிருஷ்ணன் மாலை அணிவித்தார். இனிப்பு வழங்கி, பட்டாசுவெடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் பழனி, வார்டு செயலாளர்,உள்ளாட்சி பிரதிநிதிகள், அப்துல் ரகுமான், குமார், அனந்தராமன், சண்முகவேல், சின்னத்துரை, மாவட்ட சார்பு அணிகள், ஒன்றிய பிரதிநிதிகள், கழகம் முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.






