அரசு பேருந்து திடீரென முன்பக்க டயர் வெடித்து பஞ்சரானதால் பரபரப்பு

 

புவனகிரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென முன்பக்க டயர் வெடித்து பஞ்சரானதால் பரபரப்பு

எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் ஓட்டை உடைசல் பேருந்துகளை இயக்குவதில் ஆர்வம் காட்டும் அரசு

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் சென்னை-கும்பகோணம் சாலை செல்கிறது. இந்த சாலையில் திடீரென சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததால் அதற்கு மேல் இயக்க முடியாமல் பேருந்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பழுதான சக்கரத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து உள்ளே இருந்த பல பயணிகள் பேருந்து பழுதானதின் காரணமாக கடும் எரிச்சலும், வேதனையும் அடைந்தனர். தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மன உளைச்சல் அடைந்தனர். அரசு பேருந்துகள் என்பது அத்தியாவசியமான போக்குவரத்துக்காக இயக்கப்படும் பேருந்து என்று கூறப்பட்டாலும் ஓட்டை உடைசல் பேருந்துகளை இயக்கி பயணிகள், நடத்துனர் மாணவர்களின் உயிரோடு விளையாடுவது ஸ்டாலின் அரசுக்கு கைவந்த கலையாக இருக்கிறது. எனவும் அவர்கள் வேதனையோடு குறிப்பிட்டனர். முக்கியமாக அரசு பேருந்துகள் திடீர் திடீரென பழுதாகும் போது இதனால் பல்வேறு விபத்துகளும் ஏற்படுகின்றன. தற்போது அரசு பேருந்து பழுதான சாலையில் அதிக போக்குவரத்து நிறைந்த சாலையாக இருந்த நிலையில் போக்குவரத்து பாதிப்பும் அதனால் ஏற்பட்டது. எனவே ஸ்டாலின் அரசு
பழுதில் இல்லாத பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலரின் கோரிக்கையாக இருக்கிறது.