பொதுமக்கள், வாகன ஒட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து வார்டன்கள்

பொதுமக்கள், வாகன ஒட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து வார்டன்கள்

மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை மற்றும் போக்குவரத்து டிராபிக் வார்டன் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து காவல்துணை ஆணையர் வனிதா தலைமையிலும் உதவி ஆணையர்கள் இளமாறன்,செல்வின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் போக்குவரத்து டிராபிக் வார்டன்கள் எமதர்மர், சித்திரகுப்தர் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட வேடமிட்டு தலைக்கவசம் அணியாமல் செல்வது, செல்போன் பேசிக்கொண்டே செல்வது, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்ட விதிமீறல்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தத்ரூபமாக நடித்து பொதுமக்கள் வாகன ஒட்டிகளிடையே போக்குவரத்து விழிப்புணர்வை வழங்கினர்.

தொடர்ந்து துணை ஆணையர் வனிதா தலைமையில் பள்ளி மாணவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் பூர்ணகிருஷ்ணன், தங்கமணி, ஷோபனா, நந்தகுமார், பஞ்சவர்ணம், ரமேஷ்குமார், தங்கபாண்டி, ராஜேஷ் எஸ்ஐ செல்வகுமார் உட்பட காவலர்கள் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.