கதண்டு கடித்து சிறுவன் உடபட எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி

ஸ்ரீமுஷ்ணம் அருகே
கதண்டு கடித்து சிறுவன் உடபட எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி

அரசு மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன் என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மாமங்கலம் ஊராட்சி இருந்து வருகிறது. இந்த ஊராட்சியில்
இன்று காலை 100 நாள் வேலைத்திட்ட பணியில் ஏராளமான பணியாளர்கள் பணி செய்தனர். அப்போது அவர்களை வரிசையாக நிற்க வைத்து
ஃபோட்டோ எடுத்து முடித்தவுடன், வேலை செய்த பகுதியில் கும்பலாக இருந்துள்ளனர் அப்போது அருகிலுள்ள கோவில் பகுதியில் இருந்த மரத்தில் இருந்து பறந்து வந்த கதண்டுகள் அவர்களை கடிக்க ஆரம்பித்தன. அதனால் வேடிக்கை பார்க்க வந்த சிறுவன் உட்பட எட்டு பேரை கதண்டுகள் கடித்ததால் அவர்கள் வலியால் துடித்தனர். மற்றவர்கள் சிதறி ஓடினர். மேலும் கதண்டு கடித்தவர்கள் உடனடியாக சோழத்தரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் தனியார் மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து சென்றது ஏன் எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை
பாதுகாப்பு இல்லாத இடங்களிலும், கதண்டுகள், விஷஜந்துக்கள் தீண்டக்கூடிய இடங்களிலும் மற்றும் புதர்மண்டிய பகுதிகளிலும் இறக்கிவிட்டு வேலை செய்ய சொல்லும் அவல நிலை தொடர்ந்து நடைபெற்று வருவதாக இங்கு உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு என்ன தீர்வு எனவும் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களுக்கான பணி பாதுகாப்பையும் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.