“இனி தமிழக மக்களுக்காக உழைப்போம்” தவெக விழாவில் – கொடி அறிமுகம் செய்து விஜய் பேச்சு.

சென்னை: இனி தமி­ழக மக்­க­ளுக்­காக உழைக்க வேண்டும் என கொடி அறிமுகப்­படுத்­தும் நிகழ்ச்சியில் நிர்­வா­கிகளை தமிழக வெற்றிக் கழக தலை­வர் விஜய் அறுவுறுத்தி­னார்.
தமிழக வெற்றிக் கழ­கத்தின் கொடி அறிமுகம் மற்றும் கொடி பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி
சென்னை, பனை­யூரில் உள்ள கட்சித் தலை­மை­யகத்தில் விமரிசை­யாக ஏற்­பாடு செய்­யப்­பட்டி­ருந்­தது. காலை 9.15மணிக்கு விழா மேடைக்கு விஜய் வருகை தந்­தார். அவர், தந்தை எஸ்.ஏ.சந்­திர­சே­கர், தாய் ஷாபா மற்றும் நிர்­வா­கிகளை வரவேற்­றார்.தொடர்ந்து கட்சியின் பொதுச்­செ­ய­லா­ளர் என்.ஆனந்த் வரவேற்பு­ரை­யாற்றி­னார். பின்­னர் கட்­சித் தலை­வர் விஜய் கூற நிர்­வா­கிகள் உறுதி­மொழி ஏற்றுக் கொண்­ட­னர். இதை­யடுத்து கட்­சிக் கொடியை மேடை­யில் விஜய் அறி­முகம் செய்­தார். சிவப்பு,மஞ்­சள் ஆகிய நிறத்தில் இரு போர் யானை­கள் மற்றும் வாகை மலர்,நட்­சத்திரம் ஆகியன இடம்­ பெற்றிருக்­கும் வகை­யில் கொடி உரு­வாக்­கப்­பட்டிருந்­தது.பின்­னர், கட்சித் தலை­மை­யகத்தில் கொடி கம்­பத்தில் 9.30 மணிய­ள­வில் கொடியை ஏற்ற தொண்­டர்­கள் உற்­சா­க­ம­டைந்­த­னர். பின்­னர் கட்சியின் கொடி பாடல் திரை­யிடப்­பட்­டது. அப்­போது விஜய் மற்றும் ஆனந்த் உள்­ளிட்­டோர் மகிழ்ச்சியில் கண் கலங்­கி­னர். தமிழன் கொடி பறக்­குது, தலை­வன் யுகம் பொறக்­குது எனதொடங்­கிய பாடலின் திரை­யிடல் முடிந்­த­தும் தொண்­டர்­கள் உற்­சா­கமாக முழக்­கமிட்­ட­னர்.விழா­வில் விஜய் பேசி­யதா­வது: “இன்று நம் எல்­லா­ருக்­குமே ரொம்ப சந்­தோ­ஷ­மான ஒரு நாள். நான் என்­னு­டைய அரசியல் பயணத்தை தொடங்கி அதன் தொடக்க புள்­ளியாக கட்சியின் பெயரை பிப்­ர­வரி மாதம அறிவித்­தேன் அன்­றிலிருந்து குறிப்­பிட்ட ஒரு நாளுக்­காக நீங்­கள் அனை­வ­ரும் காத்திருந்­தீர்­கள் என்று எனக்கு நன்­றா­கவே தெரிந்­தது. ஆம் நம் முதல் மாநில மாநாடு.
அதற்­கான ஏற்­பா­டுகள் எல்­லாம் நடந்து கொண்­டிருக்­கி­றது.சீக்­கிர மே மாநாடு என்­றைக்கு நடக்­கி­றது எப்­போது என்­ப­தெல்­லாம் நான் அறிவித்து விடுவேன். அதற்கு முன் நீங்­கள் எல்­லா­ருமே கொண்­டாடி மகிழ்­வ­தற்­காக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை
நான் அறிமுகப்­படுத்தி இருக்­கி­றேன். என்நெஞ்­சில் குடியிருக்­கும் என்­னு­டைய தோழர்­க­ளா­கிய உங்­கள் முன்­னா­லும் சரி என் நெஞ்­சில் குடியி­ருக்­கும் தமிழக மக்கள் முன்­னா­லும் சரி கொடியை அறிமுகப்­ப­டுத்து ­வதை மிகவும்பெரு­மை­யாக
நினைக்­கி­றேன்.இது­வ­ரைக்­கும் நாம் நமக்­காக உழைத்­தோம், இனி வரப்­போ­கும் காலத்தில் கட்சி ரீதியாக நம்மை தயார்ப்­படுத்தி தமிழகத்துக்காகவும் ,தமிழக மக்­க­ளின் உயர்­வுக்­காகவும் நாம் எல்­லா­ரும் சேர்ந்து உழைப்­போம்.
புயலுக்கு பின் அமைதி ஆர்ப்­பரிப்பு ஆர­வா­ரம் இருப்­பது போல் நம் கொடிக்கு பின்­னா­லும் ஒரு வர­லாற்று குறிப்பு ஒன்று இருக்­கி­றது. நீங்­கள் அனை­வ­ரும் ஒரு நாளுக்­காக காத்துக் கொண்டிருக்­கிறீர்­கள் என்று சொன்­னேன் அல்­லவா அன்­றைக்கு நம்மு­டைய கொள்­கை­கள் என்ன? நம்மு­டைய செயல் திட்­டங்­கள் என்ன? என சொல்­லும்­ போது அன்­றைக்கு இந்த கொடிக்­கான விளக்­கத்­தை­யும் சொல்­கி­றேன். அது­வரை இந்த கொடியை ஒரு சந்­தோ­ஷமா, ஒரு கெத்தா, நாம் ஏற்றிக்கொண்­டா­டு­வோம்.
இதை கட்சிக் கொடி­யாக நான் பார்க்­க­வில்லை. தமிழகத்தின் வருங்­கால தலைமு­றைக்­கான வெற்றிக்­கான ஒரு கொடியா­கவே பார்க்­கி­றேன். இதனை உங்­கள் உள்­ளத்திலும் உங்­கள் இல்­லத்திலும் நான் சொல்­லா­ம­லேயே ஏற்றி விடுவீர்­கள் என்­பது எனக்கு நன்­றா­கவே தெரியும். இருந்­தா­லும் அதற்­கான முறை­யான அனு­மதியைப் பெற்று விதி­களை கடை­பிடித்து அனை­வ­ரிடமும் தோழமை பாராட்டி கொடியை ஏற்று கொண்­டா­டுவோம். அது­வ­ரைக்­கும் தன்­னம்பிக்­கை­யோடு இருங்­கள்.நல்­லதே நடக்­கும்.வெற்றி நிச்­ச­யம்.” இவ்­வாறு விஜய் பேசி­னார்.நிகழ்ச்சியில் பொரு­ளா­ளர் வெங்­கட்­ரா­மன்,தலைமை நிலைய செய­லா­ளர் ராஜ­சே­கரன் உள்­ளிட்ட முக்­கிய நிர்­வா­கிகள் பங்­கேற்­ற­னர்.