சென்னை நிலமாக மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது” -: முதல்வர் மு.க. ஸ்டாலின

சென்னை நில­மாகமட்டுமல்ல, இநத நிலத்தின் மீது வாழும் ஒவ்­வொரு மனிதரின் உயிரா­கவும் இருக்கி­றது” என தமிழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் தெரி­வித்துள்­ளார். ஆகஸ்ட் 22-ம் தேதி’சென்னைதினம்’கொண்­டா­டப்­படுகி­றது. சென்னை ‘385’வயதை எட்டியிருக்­கும் சூழலில் பல்­வேறு கொண்­டாட்­டங்­கள் முன்­னெடுக்­கப்­பட்­டுள்­ளன.இந்நிலை­யில் தமிழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்பக்­கத்தில், “சென்னை நில­மாக மட்டுமல்ல, இந்தநிலத்தின் மீது வாழும் ஒவ்­வொரு மனிதரின் உயிரா­கவும் இருக்­கி­றது. வாழ்வு தேடி வந்த பல­ருக்­கும் வசந்­தத்தை வழங்கிடவா என்று தன்மடி­யோடு ஏந்­திக்­கொண்டதாய் சென்னை! இந்­தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்!பல கன­வுகளை வெற்றிக்கதை­க­ளாக எழுதிய எழுதும் நம் சென்­னை­யைக் கொண்­டா­டுவோம்!” எனப் பதிவிட்டுள்­ளார்.