கடையத்தில் கீழே கிடந்த ரூ.5 லட்சம் நகை போலீசிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டுகள்!

கடையத்தில் கீழே கிடந்த ரூ.5 லட்சம் நகை போலீசிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டுகள்.

கடையம் அக்12 : கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி பல் மருத்துவராக பணிபுரிபவர் ஆயிஷா பர்வீன் இவர் கடையம் பஜார் பகுதியில் தனது 30 கிராம் எடை கொண்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்க நகையை தொலைத்துள்ளார். இதுகுறித்து ஆயிஷா பர்வீன் கடையம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் காணாமல் போன நகையை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே கடையம் திரையரங்கு மேலாளராக பணிபுரியும் இளங்கோ என்பவர் பஜாரில் தங்க நகை ஒன்றை கண்டெடுத்துள்ளார். இதை தொடர்ந்து அவர் கடையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், நகையை பறிகொடுத்த ஆயிஷா பர்வீனிடம் ஒப்படைத்தார்.

மேலும் நகையை கண்டெடுத்த மேலாளர் இளங்கோவை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன் பாராட்டினர்.ரூ5 லட்சம் மதிப்பிலான நகையினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளங்கோவிற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.