அரசு மருத்து மனையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் கருத்து கேட்பு கூட்டம் தலைமை மருத்துவ அலுவலர் தலைமையில் நடைபெற்றது. நமது மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட போதுமான இடம் இன்றி தவித்து வரும் வேளையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் வார்டு கவுன்சிலர்கள் சமுதாய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். விரைவில் நமது மருத்துவமனை கூடுதல் கட்டிடம் கட்ட இடம் கிடைக்கும் என நம்பலாம். கூட்டத்தில் முதுநிலை மருத்துவ அலுவலர் அமுதா தேவி கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தார்