ஆகஸ்ட் 17 தமிழரின் எழுச்சி நாள், எழுச்சி தமிழர் அவர்களின் 62-வது பிறந்த நாள் விழா

 

ஆகஸ்ட் 17 தமிழரின் எழுச்சி நாள், எழுச்சி தமிழர் அவர்களின் 62-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சியின் கொடியேற்றி முகாம் விளம்பர பலகை திறந்து வைத்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி மதுரை கீழ் மதுரை அம்பேத்கர் ஹரிஜன காலணியில் இனிதே நடைபெற்றது

21 ஆண்டுகளுக்கு முன்பு எழுச்சித்தமிழர் அவர்களின் பொற்கரங்களால் துவக்கி வைக்கப்பட்ட கீழ் மதுரை பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் இருந்த முகாமை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் தீபம் என்ற சுடர் மொழி மற்றும் மாவட்ட பொருளாளர் மணியரசு மற்றும் பகுதி செயலாளர் ராசுகுட்டி அவர்களின் சீரிய முயற்சியில் இந்த முகமை புதுப்பிக்கும் பணி இனிதே நடைபெற்று கொடியேற்றத்துடன் பேர் பலகை திறந்து வைத்து அங்கு உள்ள பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி எழுச்சித் தமிழர் அவர்களின் பிறந்தநாள் விழா இனிதே நடைபெற்றது

தலைமை ப, தவசி முகம் முன்னாள் செயலாளர்

வரவேற்புரை முகம் செயலாளர் சின்னத்துரை

சிறப்புரை தீபம் என்ற சுடர் மொழி மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொருளாளர் மணி அரசு

விழா ஒருங்கிணைப்பாளர்கள் சின்னதுரை, விஜய், கார்த்திகேயன் கருப்பசாமி, சூர்யா

இந்த நிகழ்வில் தெரு முக்கியஸ்தர்கள் அழகர், சௌந்தர்ராஜன், முருகேசன், ராமச்சந்திரன் மற்றும் கீழ் மதுரை ஹரிஜன காலனி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்