புதுடெல்லி:பயங்கரவாதம், தீவிரவாதம்,பிரிவினை வாதம்ஆகியவை நமது சமூகங்களுக்கு கடும்
அச்சுறுத்தல்களாக உள்ளன என்று உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி
தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் மூன்றாவது பதிப்பு, இந்தி
யாவின் ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில்
இந்தியாவால் இணையவழியில்நடத்தப்பட்டது.
பிரதமர் மோடி தனது தொடக்க
உரை யின்போது, “உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் குரல்
வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளை விவாதிக்க ஒரு தளமாக மாறியுள்ளது.சுற்றிலும் நிச்சயமற்ற சூழல் நிலவும் நேரத்தில் இன்று நாம்
சந் தி க் கி றோ ம் .கோவிட் பாதிப்பில் இருந்து உலகம் இன்னும் முழுமையாக வெ ளி வ ர வி ல்லை .
மறுபுறம், போர் சூழ் நிலை நமது வளர்ச்சிப்பயணத்திற்கு சவால்
களை உருவாக்கியுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் சவால்களை மட்டும் நாம் தற்போது
எதிர்கொள்ள வில்லை.
சுகாதார பாதுகாப்பு,உணவு பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு
ஆகியவற்றின் சவால்களையும் நாம் எதிர் கொள்கிறோம். பொரு
ளாதார சவால்கள்,சமூகம் எதிர் கொள்ளும் தொழில்நுட்பம் சார்ந்த
சவால்களும் தற்போது அதிகரித்து
வருகின்றன. பயங்கர வாதம்,
தீவிரவாதம் மற்றும் பிரிவினை
வாதம் ஆகியவை உலகளாவிய தெற்கில் உள்ள சமூகங்களுக்கு
கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன. ஒற்றுமையில் பலம் உள்ளது.
இது உலகளாவிய தெற்கு நாடுகள் புதிய திசையை நோக்கி செல்ல உதவும். உலகளாவிய நிர்வாக
த்தை கையாள்வதற்காக முந்தைய
நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களால், தற்போதைய
நூற்றாண்டின் சவால்களை எதிர்
கொள்ள முடியவில்லை. இந்தியாவின் நிபுணத்துவம் மற்றும் அனு பவங்களை சர்வதேச தெற்குடன்
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்தார்.
இந்த உச்சிமாநாட்டில் வங்கதேசம், பூட்டான், நேபாளம்உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்






