சிதம்பரத்தில் அரசு மாடர்ன் ரைஸ் மில்லில் டன் கணக்கில் சேர்த்து வைத்துள்ள தவிடு உமி கழிவுகள் காற்றில் பறப்பதால் குடிநீரில் மிதப்பதாகவும் அதே போல் உணவில் படிவதால் சாப்பிட முடியாமலும் சுவாச பிரச்சனை உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
சிதம்பரம் அடுத்த சி.கொத்தங்குடி தோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மாடர்ன் ரைஸ் மில் இயங்கி வருகிறது இங்கு நாள்தோறும் டன் கணக்கில் நெல்மணிகள் அரைக்கப்பட்டு நுகர் பொருள் வாணிப கழகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது, நெல்மணிகள் அரைத்த பின்பு அதோட கழிவு தவிடு மற்றும் உமி ஆகியவை அகற்ற வேண்டும் ஆனால் இந்த அரசு மாடர்ன் ரைஸ் மில்லில் பல லட்சம் டன் கணக்கில் தவிடு மற்றும் உமி கழிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதால் காற்றில் உமி தவுடு படிவதால் குடிநீர் தொட்டியில் தவிடு உமி படர்ந்து குடிநீர் குடிக்க முடியாமலும் அதே போல் வீட்டில் உணவு சமைக்கும்போது காற்றில் பறந்து வருவதால் உணவை சரியான முறையில் சாப்பிட முடியாமல் அவதிப்படுவதாக குற்றம் சாட்டும் அந்த பகுதி மக்கள் இந்த தவுடு மற்றும் உமி கழிவிகளால் சுவாச பிரச்சனை மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு
செல்லக்கூடிய ஒரு சூழ்நிலையில்தான் வசித்து வருவதாகவும் இந்த பகுதியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் சுற்றுச்சூழல் அதிகாரிகள் அரசு மாடர்ன் ரைஸ் மில்லை ஆய்வு செய்து பாதுகாப்பான முறையில் இந்த கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் இல்லையென்றால் எங்கள் பகுதி குடியிருப்பு வாசிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர், எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆலையில் வெளியேற்றப்படும் உமி தவுடு கழிவுகளை அவ்வப்போது அகற்றி தூய்மையாக ஆலையை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.
சிதம்பரம் செய்தியாளர்.
வீ. இளமாறன்






