மதுரையில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
மதுரையில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் மாநிலத்தலைவர் சசிக்கலா, பொதுச்செயலாளர் சுபின் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சுஜாதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா, மாவட்டத் தலைவர் தமிழ், மாவட்டச் செயலாளர் சந்திரபோஸ், தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன், தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்பனர் சங்க மாநில துணைத்தலைவர் பரமசிவன், தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் தொடக்கவுரையாற்றினர். கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் அக்டோபர் 14ம் தேதி கோரிக்கை அட்டையணிந்து பணிபுரிவது மற்றும் முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்புவதென்றும், அக்டோபர் 28ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும், டிசம்பர் 18ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென்றும், ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் செவிலியர்களை திரட்டி சென்னையில் போராட்டம் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் சுபின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.






