சேரன்மகாதேவி சார் ஆட்சியர் தலைமையில் முக்கூடல் வருவாய் துறை அலுவலகம் எதிரில் மரக்கன்று நடும் விழா !

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் வருவாய்த்துறை அலுவலம் எதிரில் உள்ள இடத்தில கோதை வனம் என்ற பெயரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்க்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் திரு.ஆயுஷ் குப்தா, இ.ஆ.ப அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி வட்டாட்சியர் திரு. காஜா கரிபுன் நவாஸ், முக்கூடல் வருவாய்த்துறை அதிகாரி திருமதி கோமதி அவர்கள் மற்றும் தாய் தொண்டு நிறுவனம் உறுப்பினர்கள் & கீழ பாப்பாக்குடி நியூலைப் மெட்ரிகுலேஷன் அகாடமி ஆசிரியர்கள், மாணவ மாணவியர், முக்கூடல் காவல் உதவி ஆய்வாளர் ஆக்னவிஜய் அவர்கள் &ராணி அண்ணா காலேஜ் மாணவிகள் மற்றும் முக்கூடல் பேரூராட்சி நிர்வாகம் & பொதுமக்கள்

கலந்து கொண்டு சுமார் 75க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடுகளை திருமதி கோமதி RI தலைமையில் &நியூலைப் கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு இயக்கம் &கீழ பாப்பாக்குடி நியூலைப் மெட்ரிகுலேஷன் அகாடமி சார்பாக ஆதிமூலம் மற்றும் தாய் தொண்டு நிறுவனம் சார்பாக மகேஸ்வரன், ஆறுமுகம், முத்துகிருஷ்ணன், முத்துகணேஷ், சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.