சேரன்மகாதேவி பிரிவு மின்சார வாரியம் சார்பாக 79வது ஆண்டு சுதந்திர தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பிரிவு மின்சார வாரியம் சார்பில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மின்சார வாரிய அலுவலகத்தில் காலை 9 மணி அளவில் உதவி மின் பொறியாளர் கைலாச மூர்த்தி தலைமையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. உடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் சிறப்பு நிலை முகவர் முருகேசன், மூத்த முகவர் மோகன், மின் பாதை ஆய்வாளர் பெருமாள், மின்பாதை ஆய்வாளர் முருகன், கம்பியாளர் சுப்பிரமணியன், கள உதவியாளர் மகேஷ் ராஜா,கம்பியாளர் திருமதி வள்ளி, கள உதவியாளர் சரஸ்வதி, வணிக ஆய்வாளர் மழுக்கா மலி, வணிக உதவியாளர் சதீஷ்குமார், வருவாய் மேற்பார்வையாளர் முருகன், முன்னாள் சிறப்பு நிலை முகவர் செல்வம், மற்றும் சிறப்பு விருந்தினராக சமூக சேவகர் நைனாமுகமது கலந்து கொண்டார்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார்கள், பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர்கள் இந்த விளையாட்டு போட்டி கடந்த ஆறு வருடங்களாக சுதந்திர தினத்தை முன்னிட்டு கைலாசம் மூர்த்தி சார் நடத்தி வருகிறார், இது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று வெகுவாக பாராட்டினார்கள்.






