மயிலாடுதுறையில் குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி:- முதன்மைக் கல்வி அலுவலர் தொடக்கி வைத்த போட்டியில் 300-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மயிலாடுதுறை வட்டத்தில் நிகழாண்டு அனைத்து வகையான குறுவட்டப் போட்டிகளையும் செயின்ட் பால்ஸ் பள்ளி நடத்துகிறது. அந்த வகையில், குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி மயிலாடுதுறை ராஜ் மெட்ரிக் பள்ளியில் நடத்தப்பட்டது. பள்ளித் தாளாளர் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயநாதன் கலந்துகொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தார். நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் 300-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகள் 11, 14, 14 மற்றும் 19 வயதுக்குள்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்டது. இதில், மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உமாநாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






