கமலாலயம் பள்ளி மாணவர்களுக்கு காலை நேர உணவு, நோட்டு, பேனா,பென்சில் வழங்கப்பட்டது.
இன்று ஆகஸ்ட்.14-2025
மேதகு எழுச்சித்தமிழர் அவர்களின் ஆகஸ்ட்17அன்று 63 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காலை 8 மணி அளவில் வாழப்பாடி வட்டம் துக்கியாம்பாளையம் பகுதியில் இயங்கி வருகின்ற கமலாலயம் பள்ளி மாணவர் களுக்கு காலை நேர உணவு வழங்கியும் மற்றும்
நோட்டு,பேனா, பென்சில் ஆகியவைகளை ஒன்றிய செயலாளர் பெ.வேல்முருகன் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நகர செயலாளர் சி.ராமமூர்த்தி , பேளூர் நகரச் செயலாளர் ர.வேல்முருகன், பேளூர் நகர பொருளாளர் ந.அபிப்ரகுமான், நகர துணை செயலாளாளர் க.கோவிந்தராஜ்,ஒன்றிய துணை செயலாளர் செ.தர்மலிங்கம்,ஒன்றிய துணைச் செயலாளர் சி.முருகேசன், ஒன்றிய பொறுப்பாளர் அ.சுப்பிரமணி, முகாம் செயலாளர் பொண்ணுதுரை, முகாம் பொருளாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் வடக்கு மாவட்டம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,வாழப்பாடி ஒன்றியசெயலாளர்
பெ.வேல்முருகன் செய்திருந்தார்.






