தமிழ்ப் புதல்வன்’ திட்டம் துவக்கம்.. உடனடியாக மாணவர்கள் வங்கிக் கணக்கில் வந்த ரூ.1000

தமிழ்ப் புதல்வன்’ திட்டம் துவக்கம்.. உடனடியாக மாணவர்கள் வங்கிக் கணக்கில் வந்த ரூ.1000

நடப்பாண்­டிற்­கான தமிழக பட்ஜெட்­டில் அரசு பள்ளியில் 6முதல் 12ஆம் வகுப்பு வரைபடித்து கல்லூரிக்கு செல்­லும் மாணவிக­ளுக்கு மாதந்தோறும்ரூ.1000வழங்கு­வது போல,மாண­வர்­க­ளுக்கும் வழங்­கப்ப­டும் என அறிவிக்­கப்­பட்டது. அதன் அடிப்­ப­டை­யில் இன்று மாண­வர்­க­ளுக்கு மாதந்­தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்­பு­தல்­வன்திட்­டம்’ (Tamil Pudhalvan
Scheme) முத­ல­மைச்­ச­ரால் கோவையில் உள்ள கல்லூரி­யில் துவக்கி வைக்­கப்­பட்டது.அந்த வகை­யில் கோவையில் நடந்த அரசு மற்­றும் கட்சி நிகழ்ச்சியில் பங்­கேற்க முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின், இன்றுகாலை விமா­னம் மூலம் வந்த­டைந்­தார்.
தொடர்ந்து கோவை விமான
நிலை­யத்­திற்கு வந்த ஸ்டாலி­னுக்கு திமுக சார்பில் உற்­சாக வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.அதை­ய­டுத்து கோவை அரசுகலைக் கல்லூரியில் தமிழ்ப் பு­தல்­வன் திட்­டத்தை,

துவக்கி வைத்­தார்.பின்­னர், அத்­திட்­டத்­தி­னால் பயன்­பெ­றும் மாண­வர்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் ஸ்டாலின் டெபிட் கார்டு­களை வழங்கி­னார்.தொடர்ந்து, பாரதியார் பல்­கலைக்­க­ழ­கத்­தில் ரூ.40 கோடி மதிப்­பீட்­டில் கட்­டப்­பட்டுள்ள உயிரியல் துறை மற்­றும் சமூக அறிவியல் துறை ஆகிய துறை­க­ளுக்­கான புதிய கட்­ட­டங்­க­ளை­யும் திறந்து வைத்­தார்.

முன்­ன­தாக நிகழ்ச்சி மேடை­யில் பேசிய முத­லமைச்­சர் மு.க.ஸ்டாலின்,
“நேற்று இரவே உங்­க­ளது
வங்கி கணக்கிற்கு ரூ.1000
போட உத்­த­ரவிட்­டு விட்டேன். நாள்­தோறும் ஏரா­ளமான திட்­டத்தை செயல்­ப­டுத்தி வந்­தா­லும், ஒரு சில
திட்­டங்­கள் தான் மன­திற்கு நெருக்­க­மாக இருக்கும். வர­லாற்றில் பெயர் சொல்லும் திட்­ட­மாக இருக்கும். அப்­ப­டிப்­பட்ட திட்­ட­மாக ‘தமிழ்ப்பு­தல்­வன் திட்­டத்தை’ (TamilPudhalvan Scheme) துவக்கிவைக்க கோவைக்கு வந்­துள்ளேன்.இது அன்­பான, பாச­மான, சேவை மனப்­பான்மை உள்ள மக்­கள் வாழும் பகுதி.இந்த மண்­ட­லம் தொழில்
துறையில் சிறந்த மண்­ட­லம்.
சிறந்த கல்வி நிலை­யங்­கள்
கொண்ட மண்­ட­லம். பழ­மை­யும், புது­மை­யும் கலந்த
இப்­பகுதி மக்­கள் பெரி­ய­வர்­
களை மதித்­தல் மற்றும்
விருந்­தோம்­பல் பண்­பில்
சிறந்து விளங்குகின்­ற­னர்.
கடந்த 3 ஆண்­டு­க­ளில் மக்­களுக்கு
பய­ன­ளிக்கும் ஏரா­ளமான திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வருகி­றேன்.
நாட்­டிற்கே தமிழ்­நாடு தான்
முன்­னோடி என்று சொல்­லும் வகை­யில் திட்­டங்­களை
செயல்­படுத்தி வருகிறோம்.
பெண்­கள், மாண­வர்­க­ளுக்கு
பார்த்து பார்த்து திட்­டங்­களை
செய்கி­றோம். புது­மைப்பெண் திட்­டம் மூலம் 3.78 லட்­சம் மாணவி­க­ளுக்கு மாதந்­தோறும் ரூ.1000 வழங்­கப்­படுகி­றது. மாணவி­க­ளுக்கு
வழங்­கப்­படுவது போல மாண­வர்­க­ளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க
வேண்­டு­மென மாண­வர்­கள்
கேட்­டார்­கள். அந்த  கொரிக்­கையை ஏற்று உரு­வாக்­கப்பட்ட திட்­டம் தான் தமிழ்ப்புதல்­வன்திட்­டம்.

யாரெல்­லாம் பய­ன­டை­ய­லாம்:

அர­சுப் பள்ளியில் படித்து கல்­லூரி வரும் மாண­வர்­க­ளுக்கு
மாதந்­தோறும் ரூ.1000 வழங்­கப்­படும். உயர்­கல்வி­யில் மாண­வர் சேர்க்கை அதி­க­ரிக்கும் வகை­யிலும், அரசு, அரசு உதவி மாண­வர்­களை
சாத­னை­யா­ளர்­க­ளாக மாற்­றவும் இந்த திட்­டம்  கொண்டு வரப்­பட்­டுள்­ளது. 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்­கல்வியில்
படித்து கலை அறிவி­யல்,பொறியி­யல், மருத்­து­வம்,சட்­டம் சார்ந்த படிப்­பு­க­ளில் சேரும் மாண­வர்­கள் இந்த திட்­டம் மூலம் பயன்­பெ­று­வார்­கள். இத்­திட்­டத்­தி­னால் தொழில் கல்வி பயிலும் மாண­வர்­க­ளும் பயன்­பெ­றலாம்.
கல்வி கற்க எதுவும் தடை
யாக இருக்­கக்கூ­டாது: கிட்டத்­தட்ட 3.78 லட்­சம் மாண­வர்­கள் பயன்­பெ­றும்வகை­யில், ரூ.380கோடி ஒதுக்கீடு செய்­யப்­பட்­டுள்ளது. இந்த பணம் மாண­வர்­கள் வங்கி கணக்கில் நேரடி­யாக செலுத்­தப்­படும்.

உங்­க­ளின் குடும்­பத்­தில் ஒரு­
வ­னாக தந்­தை­யாக இருந்து
இந்­தத் திட்­டத்தை கெண்டு
வந்­துள்­ளேன்.கோவை அரசு
கலைக் கல்லூரி மாண­வர்­களின் கொரிக்­கையை ஏற்று
அரசு கல்லூரி மாண­வர்­கள்
தங்கி படிக்கும் விடுதி மற்­றும்  கருத்­த­ரங்க கூடம் கட்டிதரப்­படும். 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்­நாடு 1 டிரில்லி­யன் டாலர் பொரு­ளா­தாரத்தை அடை­யும் நிலையை உரு­வாக்க வேண்­டும்.
மேலை நாடு­க­ளுக்கு இணையான கட்­ட­மைப்­பு­கள் வரவேண்­டும்.
பள்ளி படிப்பு முடித்த ஒரு
மாண­வ­ரும், உயர்­கல்வி
படிக்­கா­மல் திசை மாறி போய் விடக்கூ­டாது. நல்ல வேலை வாய்ப்பை பெறவேண்­டும். இது தான் என் கனவு.