பெங்களூரு, ஆக.2 – முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடகாவின் ஹசன் தொகுதி யின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்குஎதிராக மூன்று பாலியல் வன்கொடுமை வழக்குகள், ஒரு பாலியல் துன்பு றுத்தல் வழக்கு என 4 வழக்குகள் உள்ளன. எம்.பி மற்றும் எம்எல்ஏக் கள் மீதான குற்றவழக்குகளுக்கான சிறப்பு அமர்வு நீதிமன்றம் ரேவண் ணாவின் வழக்குகளை விசாரித்து வருகிறது.இதில், ரேவண்ணாவின் குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் உதவியாளராக இருந்த 48 வயது பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கு விசாரணை கடந்த மே 2-ம் தேதி தொடங்கியது.நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் வழக்கை விசாரித்து வந்தார்.மூத்த வழக்கறி ஞர்கள் அசோக் நாயக் மற்றும் பி.என்.ஜெகதீஷா ஆகியோர் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் களாக நியமிக்கப் பட்டனர். இந்த வழக்கின் விசாரணை தினசரி நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்து, பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன் கொடுமை குற்றவாளி என நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தண்டனை குறித்த வாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தண்டனை விவரம் இன்று (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு!






