ராப் பாடகர் மீது பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை புகார்!

திருவனந்தபுரம், ஆக.1 கேரளாவை சேர்ந்த பிரபல மலையாள ராப் பாடகர் ஹிரந்தாஸ் முரளி எனப் படும் “வேடன்” மீது இளம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன் கொடுமைப் புகார் அளித்துள் ளார். காவல் துறையின் கூற்றுப் படி, புகார்தாரர் 2021 இல் இன்ஸ்டா கிராம் மூலம் வேடனொடு பழகி வந்துள்ளார். அதே ஆண்டு,அவர் தனது வீட்டிற்கு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்ணின் புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது. போலீசில் புகார் அளிக்க நினைத்த போது, வேடன் தன்னை திருமணம் செய்து கொள் வதாக உறுதியளித்து, அதன் பிறகு சம்மதமின்றி தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாக அப்பெண் தெரிவித்துள் ளார். ஐந்து முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு முதல்,வேடன் தன்னை விட் டு விலகத்தொடங் கியதால் மன உளைச்சலுக்கு ஆளான தாகவும் சமீபத்தில் தைரியம் பெற்று புகார் அளித்த தாகவும் அப்பெண் கூறினார். இந்த வழக்கில் விரைவில் விரிவான வாக்கு மூலம் பதிவு செய்யப்படும் போலீசார் தெரிவித்தனர். இதற்கி டையில், வேடன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தனது கூற்று களை ஆதரிக்க ஆதாரம் இருப்ப தாகவும், விரைவில் முன் ஜாமீன் கோரி நீதி மன்றத்தை அணுகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.