பலே பிச்சைக்காரன் ! ‘ டிஜிட்டல்’ முறை பிச்சை எடுக்கிறார்!

பலே பிச்சைக்காரன் !
‘டிஜிட்டல்’முறை பிச்சை எடுக்கிறார்
திருப்பத்தூர், ஜூலை 30- திருப்பத்தூர் மாவட்டம் புத்துக் கோவில் பகுதியில் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் ‘கியூ ஆர் ‘கோடு அட்டையை கையில் வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுத்து வருகிறார். யாராவது சில்லறை இல்லை என்றால் அக்கவுண்டில் போடு என ‘கியூ ஆர்.’ கோடு அட்டையை காட்டுகிறார். வித்தியாசமான அவரது இந்த அணுகுமுறையால் பலரும் டிஜிட்டல் முறையில் பிச்சை போட்டு வருகின்றனர்.இதனை கண்ட பொதுமக்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர்,தற்போது அலைபேசி, கடன் அட்டை (கிரெடிட் கார்டுகள் ) மற்றும் பற்று அட்டை (டெபிட் கார்டுகள்) மூலம் தான் பெரும் பாலான பரிவர்த்தனைகள் நடை பெற்று வருகின்றன. இப்பொழுது பர்சில் பணம் வைத்துக் கொள்வது அரிதாக உள்ளதாக தெரிவித்த அவர் தான் 3 வங்கி ஏடிஎம் கார்டு கள் வைத்து இருப்பதாகவும் ‘கியூ ஆர் ‘ கோடு அட்டையை வைத்துக் கொண்டு ‘டிஜிட்டல் ‘ முறையில் பிச்சை எடுப்பதாகவும் இதனால் ‘டிஜிட்டல் ‘ முறையிலேயே பல பணம் செலுத்து வதாகவும் தெரிவித்தார். இளைஞர்கள் சிலர் இதை காட்சிப் பதிவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட் டனர். அது வைரலாகி வருகிறது.