காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடு பணிகள்

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நாளை ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆலங்குளம், பாவூர்சத்திரம், காளாத்தி மடம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம், வி.கே.புரம் நகராட்சி, மணிமுத்தாறு பேரூராட்சி, அம்பை யூனியன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் அம்பை யூனியன் சார்பில் கழிப்பறைகளுக்கு தேவையான தண்ணீர் வசதி, செப்டிக் டேங்க், கழிப்பறைகளுக்கு கதவுகள் உள்ளிட்ட ரூபாய் 2.40 லட்சத்தில் செய்யப்படும் பணிகளை சேர்மன் பரணி சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரர்களிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு யூனியன் சார்பில் தேவையான நிரந்தர கழிப்பறைகளுக்கு தேவையான கதவுகள், பைப்லைன் அமைத்து தண்ணீர் வசதி மற்றும் செப்டிக் டேங்க் போன்றவற்றை செய்து கொடுத்துள்ளோம் என்றார். அவருடன் மதுரா கோட்ஸ் தொ.மு.ச தலைவர் பழனி, வேல்முருகன் மற்றும் ஒப்பந்தக்காரர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.