வீரவநல்லூரில் 10 – ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவன் தற்கொலைக்கு நீதி கேட்டு உறவினர்கள் கண்ணீர் மல்க சார் ஆட்சியரிடம் மனு!

சேரை,ஜூலை.22 – பள்ளி நிர்வாகம் மிரட்டியதால் தான் மாணவன் விஷம் அருந்தியதாகவும், 14 வயது சிறுவனுக்கு மது கிடைக்கும் அளவுக்கு போதை பொருள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக வும் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்
நெல்லை மாவட்டம் வீரவநல்லூ ரை சேர்ந்ர சங்கர குமார் என்பவர் மகன் சபரி கண்ணன், அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற நிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கடந்த 4ம் தேதி சபரி கண்ணன் உட்பட மாணவர்கள் சிலர் மது அருந்தியதாக வும் அதனை கண்டித்ததால் பெற்றோ ருக்கு பயந்து சபரிக்கண்ணன் விஷம் அருந்தியதாகவும் காவல் துறை சார்பில் கூறப்பட்டது.

அதேசமயம் பள்ளி வளாகத்தில் வைத்து தான் மாணவர்கள் மது அருந்தியதாகவும், இது தொடர்பாக தங்களுக்கு முறையான தகவல் தெரிவிக்காமல் மாணவன் மிரட்டப் பட்ட காரணத்தால் தான் தற்கொ லை செய்துகொண்டதாக பாதிக்கப் பட்ட மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாட்டியுள்ள னர். எனவே கடந்த 17 – ம் தேதி மாணவனின் சடலத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர், அதைத்தொடர்ந்து பள்ளி
வளாகத்தில் நின்ற இரண்டு பேருந்துகள் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம்
அளித்த புகாரில் போலீசார்வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.இதுபோன்ற சூழ்நிலை யில் மாணவன் தற்கொலை விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஒரு தலைபட்சமாக செயல் படுவதாக கூறி காவல்துறையை கண்டித்தும் உயிரிழந்த மாணவ னின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் 200க்கும் மேற்பட் டோர் இன்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் தலைமை யில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து வழக்கறிஞர் மகாராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியில், இந்த சம்பவத்தில் காவல் துறையினர் மீதும், பள்ளி
நிர்வாகத்தினர் மீதும் தவறு இருக்கிறது.

பள்ளி நிர்வாகத்தினர் மாணவனின் பெற்றோரை அழைத்து கண்டித்து இருந்தால் இந்த விபரீதம் நடந்திருக் கிறது. கெட்ட பழக்கம் இருப்பதாக கூறி காவல்துறையினர் மாணவரிடம் மிரட்டி எழுதி வாங்கியுள்ளனர். 14 வயது சிறுவனுக்கு என்ன கெட்ட பழக்கம் இருக்கப் போகிறது. பள்ளி நிர்வாகத்தினர் மாணவனை மிரட்டி உள்ளனர் இதனால் அச்சமடைந்த மாணவன் விஷத்தை குடித்துள்ளார். காவல் துறையினர் பாதிக்கப் பட்டவர் களுக்கு வேலை பார்க்காமல் வேறு யாருக்காகவோ வேலை செய்கிறார் கள். இங்கே வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் பொய் வழக்கு போடுவதில் வல்லவர். 14 வயது சிறுவனுக்கு மது கிடைக்கி றது என்றால் காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. அந்த
அளவுக்கு போதை பொருட்கள் சகஜமாக கிடைக்கிறது எனவே போதைப்பொருட்கள் விற்பவர்கள்
மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஎஸ்பி சத்யராஜ் நேர்மையானவர் என்பதால் இந்த வழக்கை விசாரிக்கவேண்டும் என சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். ஜாதி ரீதியாக செயல்படும் காவல் துறை யினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் அடுத்தக்கட்டமாக தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். மாணவனின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் பேருந்துகளை எரித்திருக்கலாம் அதில் கூட பேருந்துகளை எரித்த வழக்கு மட்டும் இல்லாமல் போலீசா ரை தாக்க வந்ததாக கூடுதலாக
பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று கூறினார்..