ஆடி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

5 நாட்கள் சிறப்பு பூஜைகள்

திருவனந்தபுரம்,ஜூலை.18-சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள்,வழிபாடுகள் நடைபெறும்.இந்த நாட்களில் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.இந்த நிலையில் ஆடி மாத பூஜைக் காக சபரிமலை கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில்மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. நடை திறப்பையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடை பெற வில்லை.கோவில் கருவறை மற்றும்
சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.கோவிலில் நேற்று(வியாழக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள்தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்அபிஷேகம், உஷபூஜை,உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபி ஷேகம், அத்தாழ பூஜை மற்றும் தந்திரி தலைமையில் படிபூஜை, உதயாஸ் தமனபூஜை, கலச பூஜை, களபா பிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.