தூள் கிளப்பும் குற்றாலம் சீசன்.. வல்லம் மார்க்கெட்டில் ஒரு நாளைக்கு 30 டன் பழங்கள் வரத்து..!!

குற்றால சீசன் பழங்களுக்கு என தனி மார்க்கெட் உள்ளது. இது செங்கோட்டை அருகில் உள்ள வல்லம் பகுதியில் தெற்கு எஸ்டேட் மற்றும் குண்டாறு மலைப்பகுதிகளில் விளையும் சீசன் பழங்களுக்கான மார்க்கெட் ஆகும்.

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் குற்றால சீசன் நேரமாகும். பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் குற்றால அருவியில் குளிப்பதற்கும், அங்கு கிடைக்கும் சீசன் பழங்களை ருசிப்பதற்கும் வருகைபுரிகின்றனர்

குற்றால சீசன் பழங்களுக்கு என தனி மார்க்கெட் உள்ளது. இது செங்கோட்டை அருகில் உள்ள வல்லம் பகுதியில் தெற்கு எஸ்டேட் மற்றும் குண்டாறு மலைப்பகுதி களில் விளையும் சீசன் பழங்களுக் கான மார்க்கெட் ஆகும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங் களில் ரம்புட்டான் மங்குஸ்தான் பழங்களின் சீசன் நேரமாகும்.  தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடோன்கள் உள்ளன. இங்கு மொத்தமாகவும், ஏலம் மூலம் சில்லறையாகவும் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு வல்லம் மார்க்கெட்டில் இருந்து சராசரியாக 30 லிருந்து 40 டன் பழங்கள் வரத்து உள்ளது.