15 பக்க முதல்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்
அகமதாபாத்,குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து கடந்த ஜுன் 12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில விநாடிகளில் அருகேயுள்ள ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து, வெடித்துச் சிதறியது. நாட்டையே உலுக்கிய இக்கோர விபத்தில், விமானத்தில் இருந்த 241 பேர் பலியானார்கள். மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரிக்கட்டிடம் மற்றும் குடிருப்புப் பகுதிகளில் இருந்த 19பேர் பலியாகினர். இந்த விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் அமைப்புக்கு ( ஏ ஏ ஐ பி ) மத்தியசிவில் போக்கு வரத்து அமைச்சகம் உத்தரவிட்டி ருந்தது. விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டு விசாரணை நடை பெற்றது. இந்த நிலையில் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக 15 பக்க முதல் கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வு அமைப்பு நாடாளுமன்ற குழுவிடம் சமர்ப் பித்தது. அதில் தெரிவித்திருப்பதாவது:விமானம் புறப்பட்ட 32 விநாடிகளில் என்ஜின் களுக்கு எரிபொருள் செல்வது தடைப்பட்டு, இரண்டு என்ஜின்களம் பழுதானதே விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என விமானி, சகவிமானியைக் கேட்டுள்ளார், தான் ஏதும் செய்ய வில்லை என்று அவர் பதில் அளித்துள்ளார். 2 என்ஜின் களும் செயலிழக்கும் போது ராம் ஏர் டர் பைனின் (ஸிகிஜி) என்ற அமைப்பு மூலம் 2 எரி பொருள் சுவிட்சுகளை கொண்டு விமானத்தை அவசரமாக இயக்க விமானிகள் முயற்சித்த நிலையில், முதல் என்ஜினை செயல் பாட்டுக்கு கொண்டு வர முயன்று, லேசாக வெற்றி கண்ட போதும் ,2 வது என்ஜின் செயல் படாமல் போனது. விமானத்தில் மின்சாரம் தடைபட்டதால், அவசர கால மின் சக்தி ஆதாரமான ராம் ஏர் டர்பைன் தானாகவே இயங்கியது. 180 நாட் வேகத்தை சிறிது நேரம் எட்டிய விமானம் ஏற்கனவே கீழே இறங்கி, மீண்டும் உயரத்தை அடைய தவறி விட்டது. இறுதி துயர அழைப்பு “மே டே” விமான நிலைய சுற்றளவுக்கு வெளியே உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் விமானம் மோதியதற்கு சில வினாடி களுக்கு முன்பு அனுப்பப் பட்டது. விபத்து நடந்த இடத்தில் வானிலை தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இல்லை என்றும் எரிபொருளில் எவ்வித கலப்படமும் இல்லை என்றும் சதி வேலைகள் காரணம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பறவைக் காரணமில்லை என்றும் கட்டடங் கள் மீது விழுந்து தீப்பிடித்ததே முழுமையான சேதத்துக்கு காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.மேலும், விபத்துக்கு முன்னர் யந்திரங்கள் அல்லது விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைக்கப் பட்ட தொழில் நுட்பக் குறைபாடுகள் எதுவும் இல்லை. 15,000 மணி நேர விமானப் பயணத் தை முடித்த 56 வயதான விமானி மற்றும் 3,400 மணிநேர விமானப் பயணத்தை முடித்த 32வயதான துணை விமானி இருவரும் முழு தகுதி பெற்றவர்கள் மற்றும் சமீபத்திய பணி முறை கேடுகள் அல்லது மருத்துவ பிரச்சினைகள் எதுவும் தெரிவிக்கப் படவில்லை. இந்த முதல்கட்ட விசாரணை யை ஏற்றுக் கொள்வதாக ஏர் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத் தின் இரண்டு என்ஜின்களும் கண்டு பிடிக்கப்பட்டு விமான நிலையத் தின் ஒரு கூடாரத்தில் வைக்கப் பட்டுள்ளன.முக்கியமானபாகங்கள் தனியாகப்பிரிக்கப்பட்டு ஆய்வுக் காக எடுத்துச் செல்லப் பட்டுள்ளன. விமானப் பயணிகளின் பாது காப் புக்காக உள்துறைச் செயலர் தலைமை யில் அமைக்கப்பட்ட உயர் நிலைக்குழுவும் தனது அறிக்கை யை இன்னும் ஓரிருமாதங்களில் சமர்ப்பிக்கவுள்ளது.






