முருகப்பெருமகானின் அறுபடை வீடு்களில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்!

லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!பாதுகாப்பு பணியில் ஆறு ஆயிரம் போலீசார் குவிப்பு!!

திருச்செந்தூர், ஜூலை 07 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிகேக விழா இன்று (திஙகட்கிழலம) கோலா கலமாக நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள அங்கு லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணிக்கு 6 ஆயிரம் போலீசார் குவிக்கப் பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெறகிறது.

யாகசாலை மண்டபத்தில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ராஜகோபுர அடிவாரத்தில் பிரம்மாண்டமான அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த ஒன்னாம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது தினமும் காலை மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது தினமும் காலை மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன கடந்த இரண்டு நாட்களாக தங்கம் எல்லாம் பூசப்பட்ட சுவாமி மூலவர் சமூக வள்ளி தெய்வானை உட்பட விமான கோபுர கலசங்கள் விமானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதில் வரகு நிரப்பப்பட்டு மீண்டும் அந்தந்த சுவாமி விமானத்தில் பொருத்தப்பட்டன.

மகா தீபாராதனை 

நேற்று முன்தினம் காலை 3-ம் கால யாகசாலை பூஜை மாலையில் 9-ம் கால யாகசாலை பூஜை மகா தீபாரதனை நடந்தது.இது தவிர மாலையில் சுவாமி பெருமாளுக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு நேற்று காலை 10-ம் கால யாகசாலை பூஜை நடை பெற்றது. தொடர்ந்து மாலையில் 11-ம் கால யாக சாலை பூஜையும் நடக்கிறது.இன்று திங்கள்கிழமை அதிகாலை 12-ம் காலை விவசாய குழுவில் நடக்கிறது காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப நலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

தடுப்பு வேலிகள்…

அதே நேரத்தில் மூலவர் சண்முகர் வள்ளி தெய்வானை பெருமாள் நடராஜர்  மற்றும் அனைத்து

பரிவார மூர்த்தி சுவாமி களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது இறுதிக் கட்டத்தில் உள்ளன பக்தர்கள் எந்தவித நெருக்கடியும் இன்றி விழாவை காணும் வகையில் கோவில் கடற்கரையில் தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டு உள்ளன அங்கு பாதுகாப்பு கருதி மின்விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களும் ஏற்ப டுத்தப் பட்டு உள்ளன அதேபோல் கும்பாபிஷே கத்தை பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நேரலையில் காணும் வகையில் எல்இ டி திரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்காக டிரோன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 20 டிரோன்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளன இதன் செயல்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் நேரில் பார்வையிட்டார். மேலும் பாது காப்பு ஏற்பாடுகள் போலீஸ் கட்டுப் பாட்டு அறையையும் ஆய்வு செய்தார் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ் களும் இயக்கப் படுகின்றன இதற்காக திருச்செந்தூரில் 3 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.