“இந்தி திணிப்புக்கு எதிரான மராட்டியத்தின் எழுச்சி…”

முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்

சென்னை: “இந்தி திணிப்புக்கு எதிராக சகோ­தரர் உத்­தவ் தாக்­கரே தலை­மையில் மும்­பையில் நடந்த வெற்­றிக் கொண்­டாட்­டப் பேர­ணி யின் எழுச்சியும்,உரை வீச்சும் மிகுந்த உற்­சாகம் தருகிறது” என்று தமிழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பாக அவர் தனது சமூக வலைதளப்பக்­கத்­தில் வெளியிட்ட பதிவில், “இந்தி திணிப்பை முறியடிக்க திமுக­ வும், தமிழக மக்­க­ளும் தலை முறை தலைமு­றையாக நடத்­தி­வ­ரும் மொழி உரி­மைப் போர், மாநில எல்­லை­க­ளைக் கடந்து தற்­போது மராட்­டியத்தில் சூறா­வ­ளியாகச் சுழன்­ற­டித்­துக் கொண்­டி­ருக்கிறது. தமிழகப் பள்­ளிகளில் 3-வது மொழி யாக இந்தி­யைக் கற்பித்­தால்­தான் நிதி ஒதுக்கு­வோம் என்று சட்டத்­துக் குப்புறம்­பா­கவும் அராஜக­மா­கவும் நடந்து கொள்­ளும் பாஜக, தாங்­கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா­வில் மக்­கள் எழுச்சிக்கு அஞ்சி 2-ம் முறை­யாகப்பின் ­வாங்கி இருக்கி றார்­கள். இந்தி திணிப்புக்கு எதிராக சகோ­தரர் உத்­தவ் தாக்­கரே தலை­மையில் மும்­பையில் நடந்த வெற்­றிக் கொண்­டாட்­டப் பேர­ணியின் எழுச்சியும்,உரை வீச்சும் மிகுந்த உற்­சாகம் தருகிறது.உத்­த­ரப்பிர­தே­சத்­திலும், ராஜஸ்தானிலும் கற்பிக்­கப்­படும் மூன்­றாம் மொழி என்ன, இந்தி பேசும் மாநி­லங்­கள் பின்­தங்கி இருக் கின்­றன, இந்தி பேசாத முன்­னே­றியமா நி­லங்­க­ளின் மக்­கள் மீது ஏன் இந்தி­யைத் திணிக்கிறீர்­கள் என்று ராஜ் தாக்­கரே எழுப்பிய கேள்­விகளுக்கு, இந்தி­யை­யும், சம்ஸ்­கிருதத்தை­யும் வளர்ப்­ப­தையே முழு­நேர முன்னுரி­மையாக வைத்­திருக்கிற மத்திய அரசிடம் எந்த பதி­லும் இருக்­காது.மும்மொ­ழிக் கொள்கை என்ற பெய­ரில் இந்தி சம்ஸ்­கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்­கையை ஏற்றுக் கொண்­டால் மட்டுமே ஒருங்­கி­ணைந்த கல்வித் திட்ட நிதி ரூ.2,152 கோடியை விடு­விப்­போம் என்று தமிழ­கத்­தைப்பழி­ வாங்­கும் போக்கை மத்­திய அரசு மாற்றிக் கொள்­ளுமா? தமிழகப் பள்­ளிக் குழந்­தைகளின் கல்விக்­கா­கச்சட்­டப் பூர்­வ­மாக வழங்க வேண்­டிய நிதியை உடனே விடுவிக்குமா? இந்தி ஆதிக்­கத்­துக்கு எதிராக தமிழக மக்­கள்நடத்­தி­வ­ரும் போராட்டம் உணர்வு­ம­ய­மானது மட்­டு­மல்ல, அறிவுப்பூர்­வ­மானது.இந்தி திணிப்­பால் ஏரா­ள­மான இந்திய மொழி­கள் அழிந்த வர­லாற்றை அறியா­ம­லும், இந்தி­யாவை இந்தி நாடாக்கும் செயல் திட்­டத்­தைப் புரிந்­து­ கொள் ளா­ம­லும்,‘இந்தி படித்­தால் வேலை கிடைக்கும்’என்ற வார்த்தை­க­ளைக்கிளிப்பிள்­ளை­களைப்­ போல ஒப்பித்­துக் கொண்டிருக்கும் இங்­குள்ள சிலர், இனியா­வது திருந்த வேண்­டும். மராட்­டியத்தின் எழுச்சி அவர்­க­ளின் அறிவுக் கண்­க­ளைத் திறக்­கும். தமிழுக்கு நிதி ஒதுக்கீட் டில் ஓர­வஞ்­சனை, கீழடி நாகரிகத் தை அங்­கீகரிக்க மறுக்கும் ஆண­வத்தை நீடிக்­க­விட மாட்­டோம்.தமிழுக்கும், தமிழகத்­துக்­கும் பாஜக செய்து வ­ரும் துரோ­கத்­துக்கு பாஜக பரி­காரம் தேட வேண்­டும். இல்­லை­யேல், அவர்­களுக்கும், அவர்­க­ளது புதிய கூட்­டா­ளிகளுக்கும் தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்­டும் கற்­பிக் கும்” என்று முதல்­வர் ஸ்டாலின் தெரிவித் துள்­ளார். மகாராஷ்­ராவில் நடந்­தது என்ன? முன்­ன­தாக, மகாராஷ்டிர முதல்­வர் தேவேந்திர பட்­னா­விஸ் தலைமையி­லான, பாஜக,சிவ­சேனா,தேசிய­வாத காங்­கிரஸ் கூட்­டணி அரசு,சமீ­பத்­தில் ஒன்­றாம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை மும்­மொழிக்கொள்­கையை அறிமுகப்­ப­டுத்­தியது. 3-வது மொழி­யாக இந்தி மொழி இருக்­கும் என்றும் தெரிவிக்­கப்­பட்­டது.இதற்கு, உத்­தவ் தாக்­கரே தலை­மையி­லான சிவசேனா (உத்­தவ் பாலா­சாகேப் தாக்­கரே) கட்சியும், ராஜ் தாக்­கரே தலை­மை­யி­லான மகாராஷ்டிர நவநிர்­மாண் சேனா வும் (எம் என் எஸ்) கடும் எதிர்ப்பு தெரிவித்­தன. மகாராஷ்­டிர அரசு எங்­கள்மீது இந்­தி யை திணிக்க நாங்­கள் அனுமதிக்க மாட்­டோம் என்றும் அவர்­கள் கண்­டனம் தெரிவித்­த­னர்.இதற்கு மாநி­லம் முழு­வதும் பெரும் ஆதரவு திரண்­டதை அடுத்து,மாநில அரசு தனது அறி­விப்பை திரும்­பப் பெற்­றது.மகாராஷ்டிர மாநில அரசின் இந்த முடிவை அடுத்து, அதற்­கான வெற்றி விழா மும்­பை­யில் சிவ­சேனா, எம்­என்­எஸ் இணைந்து நடத்தின.இந்நிகழ்ச்சியில், சுமார் 20 ஆண்­டுகளுக்குப் பிறகு உத்­தவ்  தாக்­க­ரேவும், ராஜ் தாக்­க­ரே வும் ஒன்­றாக இணைந்து மேடையில் தோன் றினர்.அப்­போது, அரங்­கத்தில் இருந்த இரண்டு கட்சி களின் தொண்­டர்­களும் உற்­சாகத்தில் கோஷங்களை எழுப்பியது குறிப்­பிடத்­தக்­கது.