சேரன்மாதேவியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது!

சேரன்மாதேவி, ஜூலை.5-
நெல்லை மாவட்டம், சேரன்மாதேவி யில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பி னர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடை யப்பன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் வீடு, வீடாக சென்று பொதுக் களிடையே கருத்துகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.
இதில் முன்னாள் எம்.பி ஞான திரவியம், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், சேரன்மா தேவி ஒன்றிய செயலாளர்கள் முத்துபாண்டி என்ற பிரபு, முத்து கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் தமயந்தி, மைக்கேல் மாவட்டவழக்கறிஞரணி செல்வ சூடாமணி, சரவணமணிமாறன், மாவட்ட அணி அமைப்பளர்கள் பிரேம்ஆனந்த், அன்வர்உசேன், பொதுக்குழு உறுப்பினர்கள் அபுபக்கர், கணேசன், நகர செயலாளர்கள் சேரன்மாதேவி மனிஷா செல்வராஜ், வீரவநல்லூர் சுப்பையா, கல்லிடை இசக்கி பாண்டியன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அய்யப்பன், வேல்முருகன், இசக்கி முத்துபாண்டியன், சுடலையாண்டி, பேரூராட்சி தலைவர்கள் சேரன்மா தேவி தேவி அய்யப்பன், பத்தமடை ஆபிதா ஜமால் உள்பட தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.