24 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் 13 மணி நேர கல்லீரல் அறுவை சிகிச்சை!

24 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் 13 மணி நேர கல்லீரல் அறுவை சிகிச்சையின் மூலம் 48 வயது மதுரை நோயாளியின் உயிரை காப்பாற்றிய எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை

ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழ கத்தில் சுமார் 25000 பேர் நாள் பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப் படுவ தாக மதிப்பிடப் பட்டுள்ளது

மதுரை ஜூலை 4 2025 

சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை முன்னணி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், மதுரை லில்லி மிஷன் மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை நிபுணரின் ஆதரவுடன் 13 மணி நேர உயிருள்ள நபர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து, 40 வயது மதுரை நோயாளின் உயிரைக் காப்பாற்றினார். கடுமையான மஞ்சள் காமாலை, வயிறு வீக்கம், உடல் சோர்வு உணவுக் குழாயிலி ருந்து ரத்தப்போக்கு மற்றும் படிப் படியான கல்லீரல் செயலிழப் பால் அவர் அவதிப்பட்டு வந்தார் அவர் சீராககுணமடைந்து அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய 14நாட்க ளுக்குள்மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த சிக்கலான அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் எஸ் தியாகராஜன் கருத்து தெரிவிக்கையில் ஹெப டைடிஸ் பி மற்றும் சி போன்ற நாள்பட்ட வைரஸ் தொற்றுகள், மது அருந்துதல், உடல் பருமன் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் ஆகியவை கல்லீரல் செயலிழப் புக்கு முக்கிய காரணங்களாகும். சரியான நேரத்தில் நோய் கண்டறி தல் மற்றும் லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் கல்லீரல் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட நவீன அறுவை சிகிச்சை நுட்பங் களை மேற்கொள்வதன் மூலம், சிக்கலான அறுவை சிகிச்சையை யும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடிகிறது மதுரை பகுதி நோயாளி களுக்கு எங்கள் கல்லீரல் மாற்று திட்டத்தில் 100 சதவீதம் வெற்றியை அடைந்துள்ளோம் தமிழக அரசின் முதலமைச்சர் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை முழுமை யாக கட்டணம் இன்றி அனைவரும் மேற்கொள்ளலாம்” என்றார்

நோயாளி தெரிவிக்கையில், “நான் கிட்டத்தட்ட நம்பிக்கையை இழந்து விட்டேன் எம்.ஜி.எம் மருத்துவ மனையில் மருத்துவ குழுவை சந்தித்தபோது எல்லாவற்றையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. மிக முக்கியமான கட்டத் தில், என் மனைவி வந்து என்னைக் காப்பாற்றினார் அந்த தருணம் என் வாழ்க்கையை மாற்றியது நான் இப்போது ஒரு சாதாரண, சுறுசுறுப் பான வாழ்க்கைக்கு திரும்பி விட்டேன் இது ஒரு புதிய ஆரம்பம் போல் உணர்கிறேன்’