ஜூலை 4-ந்தேதி த.வெ.க. செயற்குழு கூட்டம் – புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!

சென்னை ஜூன் 28 தமி­ழக வெற்­றிக்கழக பொதுச்­செய­லாளர்புஸ்ஸி ஆனந்த் வெளி­யிட்­டுள்ள
அறிக்­கையில் கூறி­யி­ருப்­பதா­வது: தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் மாநி­லச் செயற்கு­ழுக் கூட்­டம், கழ­கத் தலை­வர் விஜய் தலை­மை­யில்,வரு­கிற 4-ந்தேதி (வெள்­ளிக்­கி­ழமை) காலை 10.00 மணிக்கு, சென்னை,பனை­யூ­ரில் உள்ள கழ­கத்­தின் தலைமை நிலை­யச் செய­ல­கத்­தில் நடைபெற உள்­ளது.
இக்­கூட்­டத்­தில், கழ­கத்­தின் சார்­பாக அடுத்­தடுத்து மேற்­கொள்­ளப்பட வேண்­டிய ஆக்­கப்­பூர்வ    நட­வ­டிக்கைகள் குறித்­தும், நம்வெற்­றித் தலை­வர் அவர்­க­ளின் நிகழ்­வு­கள் மற்­றும் தொடர் மக்­கள் சந்­திப்­பு­கள் குறித்த திட்ட­மி­டல்­கள் மற்­றும் ஆலோசனை­கள் குறித்­தும் கலந்­து­ரை­யா­டப்பட உள்­ளது.எனவே,கழ­கச் சட்ட விதி­க­ளின்­படி,மாநி­லச் செயற்­குழு உறுப்­பி­னர்­களான – தலை­மைக் கழக நிர்­வா­கி­கள்,தலை­மைக் கழ­கச் சிறப்­புக்குழு உறுப்­பி­னர்­கள்,கழ­கத்­தின் மாநில நிர்வா­கி­கள்/கழக மாவட்டங்­களை உள்­ள டக்­கிய மண்­டலப் பொறுப்­புச்செய­லா­ளர்­கள், கழக மாவட்­டச் செய­லா­ளர்கள் மற்­றும் சார்பு அணி­க­ளின் மாநில ஒருங்­கி­ணைப்பாளர்கள் மட்­டும் பங்­கேற்­கும்­ படி, கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் ஒப்­பு­த­லு­டன் கேட்­டுக்­கொள்­கி­றேன்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்ளது.