தேர்தலில் போட்­டி­யி­டா­த­ 345 அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கும் தேர்தல் ஆணையம்!

­டெல்லி ஜூன் 28, இந்­திய தேர்­தல் ஆணை­யம் 345 பதி­வு­ செய்­யப்­பட்ட அங்­கீ­க­ரிக்­கப்­படாத அர­சி­யல் கட்­சி­களை (RUPPs) முதற்­கட்­ட­மாக பட்­டி­ய­லி­லி­ருந்துநீக்­கும் நடவ­டிக்­கை யை தொடங்­கி­யுள்­ளது.இது தொடர்­பாக  இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தின் துணை இயக்­கு­நர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை­யில் தெரி­வித்­தி­ருப்ப­தா­வது: 2019 முதல் கடந்த 6 ஆண்­டு­க­ளாகஒரு தேர்த­லில்­ கூட போட்­டி­யி­டா­மல், அத்­தி­யா­வ­சிய நிபந்­தனையை நிறை­வேற்­றத் தவ­றி­யுள்ள மற்­றும்  இருப்­பி­டம் கண்­ட­றிய முடி­யாத கட்­சி­கள் என்­பதன் கார­ண­மாக 345 பதி­வு­ செய்யப்­பட்ட அங்­கீ­க­ரிககப்­படாத அர­சி­யல் கட்­சி­களை (RUPPs) முதற்­கட்­ட­மாக பட்­டி­ய­லிலி­ருந்து நீக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கையை இந்­தியதேர்­தல் ஆணை­யத்­தின் தலை­வர் ஞானேஷ்குமார் மற்­றும் தேர்­தல் ஆணை­யா­ளர்­கள் டாக்டர் சுக்­பீர் சிங் சந்து மற்றும் டாக்­டர் விவேக் ஜோஷி ஆகி­யோர் தலை­மை­யில் இந்­திய தேர்­தல் ஆணை­யம் தொடங்­கி­யுள்­ளது.

2019ம் ஆண்­டுக்­குப் பிறகு கடந்த ஆறு ஆண்­டு­க­ளில் ஒரு தேர்த­லில் கூட போட்­டி­யி­டா­த­தும், அவற்­றின் அலு­வ­ல­கங்­கள் எந்த இடத்­தி­லும் அடை­யா­ளம் காணப்­படா­த­தும் கார­ண­மாக, நாடு முழு­வ­தும் உள்ள பல்­வேறு மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தேசங்­களைச் சேர்ந்த 345 RUPPs அடை­யா­ளம் காணப்பட்­டுள்­ளன.இந்­திய தேர்­தல்ஆணை­யத்­தில் தற்போது பதிவு செய்­யப்பட்­டுள்ள 2,800க்கும் மேற்­பட்ட பதி­வு­ செய்யப்­பட்ட அங்­கீ­க­ரிக்கப்­படாத  அர­சி­யல் கட்சி­க­ளில் பல கட்­சி­கள் பதி­வு ­செய்­யப்­பட்ட அங்­கீ­க­ரிக்­கப்­படாத அர­சி­யல் கட்­சி­க­ளாக தொடர தேவை­யான நிபந்­தனைகளை பூர்த்தி செய்­யா தது தேர்தல் ஆணை­யத்­தின் கவ­னத்­திற்கு வந்­துள்ளது. எனவே,நாடு முழு­வ­தும் இத்­தகையகட்­சி­களை அடை­யா­ளம் காணும் பணியை தேர்­தல் ஆணை­யம் மேற் கொண்­டது.இதன் அடிப்­படையில் 345 கட்­சி­கள் தற்போது வரை அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ளன. எந்த கட்­சி­யும் தேவை­யில்­லா­மல் பட்டி­ய­லி­லி­ருந்து நீக்­கப்­படக்­கூ­டாது என்­பதற் காக, சம்­பந்­தப்­பட்ட மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தேசங்­க­ளின் தலைமை தேர்­தல் அதி­கா­ரி­க­ளுக்கு அந்த கட்சி­க­ளுக்கு கார­ணம் கூற நோட்­டீஸ் (Show CauseNotice) உத்­த­ர­வி­டப்­பட்டுள்­ளது. அதன்­பின், அவை தலைமை தேர்தல் அதி­கா­ரி­க­ளால் நடத்­தப்­ப­டும் விசா­ர­ணை­யின் வாயி­லாக அவற்­றுக்கு விளக்­கம் தர வாய்ப்பு அளிக்­கப்ப­டும்.எந்­தவொரு பதி­வு­செய்­யப்­பட்ட  அங்­கீ­க­ரிக்­கப்­படாத அர­சி­யல் கட்­சி­களை பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்கு­வது தொடர்­பான இறுதி முடிவை இந்­திய தேர்­தல் ஆணை­யம் எடுக்­கும்.நாட்­டில் உள்ள அர­சி­யல் கட்­சி­கள் (தேசிய/மாநில/பதிவு ­செய்­யப்­பட்ட அங்கீ­கரிக்­கப்­படாதஅர­சி­யல் கட்­சி­கள்), 1951 ம் ஆண்­டின் மக்­களாட்சித்பிர­தி­நி­தித்­து­வச் சட்டத்­தின் பிரிவு 29A ன் கீழ் பதிவு செய்­யப்பட்டு வரு­கின்­றன.

இந்­தச் சட்­டப்­பி­ரி­வின் கீழ், அர­சி­யல் கட்­சி­க­ளாக பதிவு செய்­யப்பட்ட அமைப்­பு­கள் வரி­வி­லக்கு போன்ற பல நன்­மை­களை பெறு­கின்­றன.2019ம் ஆண்­டி­லி­ருந்து நாடா­ளு­மன்­றம் மற்­றும் மாநில/யூனி­யன்பிர­தேச   சட்­டப்­பேர­வை­க­ளுக்­கான பொதுத்­தேர்­தல் அல்­லது இடைத்­தேர்­தல்­களில் எதி­லும் போட்­டி­யி­டாத கட்­சி­க­ளை­யும், இருப்­பி­டம் கண்­ட­றியமுடி­யாத கட்­சி­க­ளை­யும் நீக்­கு­வ­தன் மூலம் அர­சி­யல் அமைப்பை தூய்­மைப்­ப­டுத்­து­வதே இந்த நட­வ­டிக்­கை­யின் நோக்­க­மா­கும். இந்­தத்தேடல் பணி­யின் முதல் கட்­ட­மாக 345 பதி­வு ­செய்­யப்­பட்ட அங்­கீ­க­ரிக்­கப்­படாத அர­சி­யல் கட்­சி­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டுள்­ளன.அர­சி­யல் அமைப்பை சீர்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் இந்­நட­வடிக் கை தொடர்ந்து மேற்கொள்­ளப்­ப­டும். இவ்­வாறு அதில் தெரி­வித்­துள்ளார்.