விழுப்புரம் மாவட்டத்தினை உள்ளடக்கிய திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது முகையூர் ஒன்றியம்.இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொது மக்களும்,திட்ட பணிகள் நிமித்தம் பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்கள்,ஒன்றியகவுன்சிலர்கள் வந்து செல்ல கூடிய முக்கிய இடமாக முகையூர் ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முக்கிய பொறுப்பு வகிக்கின்ற வட்டார வளர்ச்சி அலுவலர்(பொது),வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊராட்சி),ஆகிய இருவரில் ஒருவர் அடிக்கடி முகாம், கிராம விசிட் என்ற பெயரில் காணாமல் போவதும்,சில நாட்களில் இரண்டு முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் மாவட்டம், வட்டம் என்ற பெயரில் கூட்டங்களுக்கு மீட்டிங் என்ற பெயரில் செல்வதாலும்,பொது மக்களும், ஊராட்சி மன்ற தலைவர்களும்,ஒன்றிய கவுன்சிலர்களும் தங்களது குறைகளை வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் நேரில் தெரிவிக்க இயலாது அவதிப்படும் நிலை உள்ளது. இதுபற்றி நமது துணை ஆசிரியர் தமிழக முதல்வர் மாண்புமிகு:மு.கஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து விரைவில் முறையிட உள்ளார்.
இனியேனும் முகையூர் ஒன்றிய தலைமை பொறுப்பில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் “மக்கள் பணியே மகேசன் பணி என்று செய்வார்களா!? பொறுத்திருந்து பார்ப்போம்!
செய்திகளுக்காக தமிழன் உதயம் துணை ஆசிரியர் பெ.எலியாஸ்,
பொன்முடி தொகுதியில் மக்கள் படும்பாடு!






