போதைப்பொருள் வாட்ஸ்ஆப் குழு: கிருஷ்ணாவுடன் இருந்த நடிகைகள் யார் ?

நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் போதைப்பொருள் தொடர்பான வாட்ஸ்ஆப் குழுவில் சினிமா பிரபலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் மற்றும் அவர்கள் குழுவிடம் இருந்து போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய வழக்கில் தமிழ் திரை நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரைத் தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணா ஆகிய இருவரும் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவின் செல்போனை கைப்பற்றி சைபர் போலீசார் உதவியுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அவரது செல்போனில் அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீண்டுவாட்ஸ்ஆப் குழுக்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போதும் வாட்ஸ்ஆப்பில் கிருஷ்ணா அவரது நண்பருடன் போதை பொருள் தொடர்பான விவரங்களை கோட் வேர்டில் பேசியதும் மேலும் வாட்ஸ் அப் குழுக்கள் நேரம் இடம் ஆகிய வற்றை பகிர்ந்து போதை பொருளை பயன்படுத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அந்த வாட்ஸ் ஆப் குழுவில் 10 நபர்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது அவர்கள் கிருஷ்ணாவின் கல்லூரி நண்பர்கள் மற்றும் திரை உலக நண்பர்கள் என்பது தெரிய வந்துள்ளது.கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இவர்கள் அந்த வாட்ஸ்ஆப் குழு மூலமாக பல்வேறு போதைப் பொருள் விருந்துகளை நடத்தி வந்துள்ளனர்.

இதனால் அந்த குழுவில் இருந்த மற்றவர்கள் போதைப் பொருளை பயன்படுத்தி இருப்பார்கள் என்ன நோக்கத்தினை அனைவருக்கும் நுங்கம்பாக்கம் போலீசார் சமன் அனுப்பிய நேரடியாக வரவைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். மேலும்,இந்த விசாரணை மூலம் அவர்கள் வேறு யாருக்காவது போதை பொருட் களை விற்பனை செய்து உள்ளார்களா அல்லது அவர் களுடன் இணைந்து வேறு யாரையாவது பயன்படுத்தி உள்ளார்களா என்பதையும் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,அதேபோல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரசாந்த் பிரதீப் மற்றும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீ கிருஷ்ணா ஆகியோ ரையும் போலீஸ் காவலில் எடுக்க நுங்கம்பாக்கம் போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.