போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில்உள்ள ஒரு மதுபானக்கூடத்தில் அடிதடி யில் ஈடுபட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி பிரசாத் உள்ளிட்ட பலர் கடந்த மாதம் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு போதைப் பொருள் வழங்கிய சேலம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாா் என்ற பிரடோ, சா்வதேச போதைப் பொருள்கடத்தல் கும்பலைச் சோ்ந்த மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச்சோ்ந்த ஜான் ஆகிய இருவரையும் கடந்த 19-ஆம் தேதி நுங்கம்பாக்கம் வானிலைஆராய்ச்சி மையம் அருகே வைத்து கைது செய்தனர்.அவர் அளித்த தகவலின் அடிப்படையில்,பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப் பொருள் பயன் படுத்தியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் மருத்துவப்பரிசோதனையில் அவர் கொக் கைன் பயன்படுத்தியது உறுதி யானதையடுத்து கைது செய்யப் பட்டார்.பிரதீப் அளித்த தகவலின்
அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா வுக்கும் தற்போது காவல்துறை யினர் சம்மன்அனுப்பியுள்ளனர். நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தினரா என்பது விசாரணையில் தெரியவரும்.
இதனிடையே அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தான் தன்னை போதைப்பொருள் பயன்படுத்த பழக்கப்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். படத்தில் நடித்ததற்காக தனக்கு தர வேண்டிய ரூ. 10 லட்சத்திற்கு கொக்கைன் கொடுத்ததாகவும் பின்னர் தானே அதற்கு அடிமையா னதாகவும் கூறியுள்ளார்.நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதி மன்றக்காவல் வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்!






