சேரன்மகாதேவியில் தமிழ்ப் பேரவை 62 வது ஆண்டு விழா இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ பங்கேற்பு!

சேரை, ஜூன். 24: சேரன்மகாதேவியில் நடந்த தமிழ்ப் பேரவை 62 வது ஆண்டு விழாவில்  எம்.எல் ஏ இசக்கிசுப்பையா பங்கேற்றார்.
சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்தமிழ்ப்பேரவையின் 62 வது ஆண்டு விழா நடந்தது. மூன்று தினங்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல் நாள் நிகழ்ச்சிக்கு பேரவை துணைத் தலைவர் ராமன் தலைமை வகித்தார். பென்சனர் சங்கத் தலைவர் வீரபாகு முன்னிலை வகித்தார். துணைச்செயலாளர் சாய்ராம்வரவேற்றார். சேரன்மகாதேவி தாசில்தார் காஜாகரீபுன் நவாஸ், இன்ஸ்பெக்டர்  தர்மராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து  தேவாரப்பண்ணிசை, கருத்தரங்கு நடந்தது. 2வது நாள் நடந்த நிகழ்ச்சிக்கு பேரவையின் மதிப்புறுத் தலைவர் முத்தையா தலைமை வகித்தார். நிகழ்ச்சி அமைப்பாளர் செந்தூர்நாதன் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் வரவேற்றார். மூத்த குடிமக்கள் மன்ற தலைவர் சிவஞானம் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து திருமுறை பண்ணிசை, பட்டிமன்றம் நடந்தது. இறுதி நாளான நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ் பேரவை தலைவர் கூனியூர் மாடசாமி
தலைமை வகித்தார்.முன்னாள் பேரூராட்சி தலைவர் பாபநாசம் முன்னிலை வகித்தார். பொருளாளர் பொன்னழகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கிசுப்பையா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பேரவை செயலர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.