குற்றாலம், ஜூன்.19 தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளான மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில் 2 நாட்களுக்கு பின்பு நேற்று முதல் மெயின் அருவி யில் குளிக்கஅனுமதி வழங்கப் பட்டது. ஆனால் பழைய குற்றால அருவி,ஐந்தருவியில் தடை நீடிக்கப் பட்டிருந்தது. நேற்று காலைமுதல் மழைப் பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் அடிக்க தொடங் கியதால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் சீரானது. இதனால் தடை விதிக்கப்பட்டிருந்த பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவி யிலும் சுற்றுலா பயணி களுக்கு குளிக்கஅனுமதி வழங்கப் பட்டது. நேற்று காலை முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்த நிலையில் வெளியூர்களில்இருந்து வந்திருந்த பல சுற்றுலா பயணி களும் அருவி நீரில் உற்சாக மாக குளித்து மகிழ்ந்தனர்.மேலும் இந்த ஆண்டிற்கான குற்றால சாரல் திருவிழா அடுத்த மாதம் நடத்தப் படுவதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது. சாரல் திருவிழா தொடங் கப்படும் தேதி இன்னும் ஒரு சில தினங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட வாய்ப் புள்ளதாக கூறப்படுகிறது.
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்






