கீழடி அகழய்வுகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வு முடிவுகளை வெளியிட ஒன்றிய பா.ஜ.க அரசு மருத்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த தமிழர் விரோதப் போக்கிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் கீழடி அகழாய்வுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து மதுரையில் (18.6. 2025 ) திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என செயலாளர் ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார் இதை தொடர்ந்து இன்று திமுக மாணவர் அணிநடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்திற்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்து போராடி, அறிவியல் துணை கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இறந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள்.திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! (ஜூன் 18 ) மதுரை வீரகனூரில், திமுக மாணவர் அணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை! வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம் என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்திய அவர்களை திருத்துவோம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு






