சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர் களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சியில் சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர் களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவருக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தவச்செல்வம் அனைவரையும் வரவேற்றார்.

பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவியருக்கு உயர்கல்வி பெறுவது குறித்தும் கல்வி உதவி தொகைகள் பெறுவது குறித்தும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் பெறுவது குறித்தும் கற்ற கல்விக்கு ஏற்றார் போல் பணியிடங்களை தேர்வு செய்வது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மத்திய மாநில அரசுகளின் வேலை வாய்ப்புகள் தனியார் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வது எப்படி? என்ற பயனுள்ள தகவல்கள் இதில் பரிமாறப்பட்டன போட்டி தேர்வு களுக்கு தயாராக செய்யப்பட வேண்டிய பாடத்திட்டங்கள் மற்றும் எளிய முறையில் தேர்வுகளை கையாளுதல் போன்ற அறிவுரை கள் வழங்கப்பட்டன.

2025 ஆம் ஆண்டில் மத்திய மாநில அரசுகளின் போட்டி தேர்வுகள் மற்றும் பணியிட விவரங்கள் சுயதொழில் துவங்க ஆர்வம் உள்ள மாணவியர் மாணவிகளுக்கு தொழில் வாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தல் போன்ற பல்வேறு தகவல்கள் இந்த வழிகாட்டும் நிகழ்ச்சியில் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் சுயதொழில் வழிகாட்டுநர் கனகசபாபதி உயர்கல்வி ஆலோசகர் பாஸ்கரன் நெடுஞ்சாலை துறை உதவியாளர் சாகிரா பானு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மாசில் ஆஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.