சென்னை: புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது, கிராம மக்கள் சேற்றை அள்ளி வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் பொன்முடியுடன் சென்ற அவரது மகனும், எம்.பி.யுமான கவுதசிகாமணி மற்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்டது. வெள்ளத்தில் தத்தளிக் கும் தங்களுக்கு குடிநீர் கூட இல்லை, எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று கடும் கோபத்தில் இருந்த மக்கள், சாலையில் உள்ள சேற்று நீரை இறைத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நோக்கி வீசி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அப்போது பல பகுதிகளில் பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் வாக்குவாதம் செய்தனர். இந்த நிலையில், வெள்ளம் பாதித்த இருவேல்பட்டு பகுதியில் ஆய்வு செய்யச் சென்ற வனத்துறை அமைச்சர்பொன்முடி, முன்னாள் எம்பியுமான கவுதம சிகாமணி, விழுப்புரம் கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகளை அக்கிராம மக்கள் உள்ளே வரக்கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் பேச முயன்றபோது, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சாலையில் உள்ள சேற்றி வாரி இறைத்தனர். இது அவர்கள் மீது பட்டது. இதனால், அமைச்சர்களு டன் வந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் எற்படும் நிலை உருவானது.
உடனே காவல்துறையினர் தலையிட்டு, அமைச்சர் மற்றும் அதிகாரிகளை திருப்பி அழைத்துச் சென்றனர். பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.






