திருவண்ணாமலை ,டிச.௦3 திருவண்ணாமலையில் மண்ணில் புதையுண்ட, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; மற்ற நால்வரின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை . தேடுதல் பணி தொடர்ந்து நடக்கிறது.பெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலையில் பெய்த கன மழையில் அண்ணாமலையார் மலையில் மண்மற்றும் பாறை சரிவு ஏற்பட்ட து. இதில் வ.உ.சி. நகரில் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு 2 வீடுகள் சேதம் அடைந்தன. பாறை உருண்டு விழுந்ததால் வீடு ஒன்று புதையுண்ட து. அந்த வீட்டில் இருந்த ராஜ்குமார், மீனா தம்பதி, அவர்களின் குழந்தைகள் கவுதம், இனியா, பக்கத்து வீட்டு சிறுவர்கள், வினோதினி, ரம்யா என 7 பேர் சிக்கிக் கொண்டனர்.சம்பவம் நடந்த நேற்று அங்கு மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தாணத்தால் மீட்பு பணிகளில் தொய்வும், தாமதமும் ஏற்பட்டது. மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந் நிலையில் சம்பவ பகுதியில் மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். அவர் கூறுகைகையில், ”திருவண்ணாமலையில் இதுபோன்ற மண்சரிவு என்ற நிகழ்வு ஏற்பட்டதே இல்லை . இம்முறை அதிக மழை பெய்ததால் மண்சரிந்துள்ளது. பாறாங்கற்கள் உருண்டதில், மலையின் கீழே இருந்த 2 வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ”அதில் ஒரு வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். மற்றொரு வீட்டில் உள்ள 7 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள நிலை ஏற்பட்ட து. அவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட் டு இருக்கிறோம்,” என்றார்.இதனிடையே , மழைகுறுக்கிட்டபோதிலும் 12 மணிநேரத்தை கடந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் மூன்று பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது.ஒரே குடும்பத்தை சேர்ந்த , குழந்தைகள் உள்ளிட்டோர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மண் சரிவு; 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு






