திருநெல்வேலியில், 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களையும், மருத்துவ பிரிவுகளையும், திறந்து வைத்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.

திரு­நெல்­வேலி,நவ.18:- தமிழக மருத்துவம் மற்றும் மக்­கள் நல்­வாழ்வுத்துறை அமைச்­சர் மா.சுப்பிர­ம­ணியன்,பாளையங்­கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திரு­நெல்­வேலி அரசு மருத்துவக்­கல்லூரி மருத்துவ­ம­னையில், 1 கோடியே 10 லட்­சம் மதிப்பில் உருவாக்­கப்பட்டுள்ள, 23 படுக்­கைகள் கொண்ட கட்­ட­ணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு [PAYWARDS] கட்டி­டத்­தையும், 15 லட்­சம் ரூபாய் மதிப்பில் அமைக்­கப்­பட்டுள்ள, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண்­க­ளுக்­கான ,அனைத்து வசதிகளும் கொண்ட, சிறப்பு அறைகள் கொண்ட கட்டி­டத்தை­யும்,பாளையங்கோட்­டையை அடுத்துள்ள ரெட்டியார்பட்டியில், 50 லட்­சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்­கப்­பட்டுள்ள,போதுசுகா­தார அலகு கட்டி­டத்­தை­யும், இன்று [நவ.17] காலை­யில், ரிப்பன் வெட்டி திறந்து வைத்­தார். அத­னைத் தொடர்ந்து, கர்ப்பிணிதாய்­மார்­க­ளுக்கு ஊட்­டச்சத்து பெட்­ட­கம் வழங்­குதல்,டாக்­டர் முத்துலட்சுமிரெட்டி மகப்­பேறு நிதியு­தவி வழங்­கு­தல் மற்றும் யானைக்­கால் பாதிக்­கப்பட்­ட­வர்­க­ளுக்கு, மாதாந்திர நிதியு­தவி பெறுவ­தற்கான ஆணை­கள் வழங்­குதல்- ஆகிய நலத்திட்ட உத­விகளை, அமைச்­சர் சுப்பிர­ம­ணியன் வழங்­கினார். மாவட்ட ஆட்சித்­தலை­வர் டாக்­டர் கா.ப.கார்த்திகே­யன் தலை­மை­யில் நடைபெற்ற இந்த நிகழ்ச்­சியில்,நெல்லைமாநகராட்சி ஆணை­யர் என்.ஓ.சுகபுத்ரா, திருநெல்­வேலி அரசு மருத்துவக்­கல்லூரி முதல்­வர்[DEAN] டாக்­டர். சி.ரேவதி பாலன், திரு­நெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பி­னர் சி.ராபர்ட் புரூஸ், சட்­டமன்ற உறுப்பி­னர்­கள் பாளையங்­கோட்டை மு.அப்துல் வகாப், நாங்கு­நேரி ரூபி ஆர் மனோ­கரன், நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராம­கிருஷ்­ணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, தமிழக முன்­னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், முன்­னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்­கான், நாடாளுமன்ற மேலவை முன்னாள் உறுப்பி­னர் விஜிலாசத்தியா­னந்த் ஆகி­யோர்,கலந்து கொண்­ட­னர்.