உலக கேரம் போட்டி- 3 தங்­கம் வென்ற தமிழக வீராங்­க­னைக்கு முதல்-அ­மைச்­சர் வாழ்த்து!

கலி­போர்­னியா, நவ.18 6-வது உலக கேரம் சாம்பியன் ஷிப்போட்டி அமெரிக் காவின் கலி­போர்னியா மாகாணத்தில் நடை­பெற்று வருகிறது. அதில் பல்­வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள்,வீராங்­க­னைகள் பங்­கேற்றுள்­ள­னர்.இதில் தமிழக வீராங்­க­னையான சென்­னையை சேர்ந்த காசிமா (வயது 17) பங்­கேற்றிருந்­தார். இவர் மகளிர் தனிந­பர், இரட்டையர், குழு எனமூன் றுபிரிவுகளிலும் முதலி­டத்தை பிடித்து 3 தங்­கப்­ப­தக்­கங்களை வென்று அசத்தியுள்­ளார். காசிமா சென்னை புது வண்ணாரப்­பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் என்­பது குறிப்பி­டத்­தக்­கது.இந்­நி­லை­யி ல் காசி­மாவுக்கு தமிழக முதல்-அ­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்­கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்­ளார்.அதில், ” அமெரிக்காவில் நடை­பெற்ற ஆறாவது உலககேரம் போட்டியில் சென்­னை­யைச் சேர்ந்த நம் தமிழ்­மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முத­லிடம் பெற்றுள்­ள­தற்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்!பெருமை கொள்கி­றேன் மகளே…எளி­யோ­ரின் வெற்றியில்­தான் திராவிடமாட­லின் வெற்றி அடங்­கியிருக்கிறது!” என்றுபதிவிட்டுள்­ளார்.