பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர் மீது நடவடிக்கை எடுத்து பாதையை மீட்டு தர வேண்டி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர் மீது நடவடிக்கை எடுத்து பாதையை மீட்டு தர வேண்டி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அரசடி தென்பாக தெரு ஜேக்கப் அவர்களின் மகன் தாமஸ் அவருக்கு பூர்வீகமான வீட்டில் வசித்து வருகிறார் கடந்த சில ஆண்டுக்கு முன் சேரன்மகாதேவி தொழில் வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தவரும், தனியார் நிறுவனம் நடத்தி வரும் குடும்பத்தினர் பொதுபாதையை ஆக்கிரமைத்துக் கொண்டு வர்த்தக ரீதியாக விளையாட்டு கொட்டகை நடத்தி வருகிறார். இது சம்பந்தமாக அரசடி தெரு கத்தோலிக்க தலைவர், ஊர் மக்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிட மகாஜன சங்க நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தை செய்தும் எந்தவிதமான தீர்வும் காண முடியவில்லை. இது சம்பந்தமாக 2023 அக்டோபர் 13ம் தேதியிலும், 2024 பிப்ரவரி 2ஆம் தேதியிலும் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாய் கிடைக்கப்பெற்ற உரிய ஆதாரங்களுடன் கொடுத்த மனுக்களுக்கு இது நாள் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், மீண்டும் இன்று சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் தாமஸ்,பகுஜன் சமாஜ் கட்சி சிவராஜ், விடுதலை சிறுத்தை கட்சி அழகேசன், காலேப், கண்ணன்ஆதித்தமிழர் பேரவை, அஸ்வின், ராகுல்,ஜோஸ்மின், பிரிட்டோ லோகநாதன் மற்றும் ஊர் மக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்