வரும் தேர்தல்களில் தவெகவுக்கு வெற்றி: புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை!

பெரம்­ப­லூர்:தமி­ழக வெற்­றிக் கழக நிர்­வா­கி­கள் ஆலோ­சனைக்கூட்­டம் பெரம்­ப­லூ­ரில் நேற்று முன் ­தி­னம் இரவு நடைபெற்­றது.இதில் பொதுச்­செ­ய­லாளர் புஸ்ஸி ஆனந்த் பேசி­ய­தாவது: வரும் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் வென்று,தலை­வர் விஜய் தலைமையி­லான ஆட்­சியை அமைக்க கட்சி நிர்­வா­கி­கள் ஒற்­று­மை­யு­டன், கடு­மையாக பாடு­பட வேண்­டும்.இந்த மாதம் நடை பெறஉள்­ள­வாக்­காளர் பட்­டி­ய­லில் திருத்­தம் தொடர்­பான முகாம்களில் கட்சி­யினர் பங்­கேற்று, ­ விடு­பட்ட பெயர்­களை சேர்க்­க­வும்,திருத்­தம் செய்­ய­வும் உதவவேண்­டும். தலை­வர் விஜய் விரை­வில் ஒவ்­வொரு சட்­டப்­பே­ர­வைத்தொகுதி வாரி­யா­கச் சென்று தொண்­டர்­களை சந்­திக்க உள்­ளார். தவெக தொடங்­கு­ வ­தற்கு முன்­பாகவே உள்­ளாட்­சித் தேர்­தலில் 127 இடங்­க­ளில் நாம் வெற்றி பெற்­றுள்ளோம். தற்போது கட்சி தொடங்­கப்­பட்டுள்­ளதால்,அனைத்து தேர்­தல்­க­ளி­லும் நிச்­ச­யம் வெற்றி கிடைக்­கும்.இவ்­வாறு அவர் பேசி­னார்.