தஞ்சாவூர், நவ:10-தஞ்சையில் கார்களில் ரகசிய அறை அமைத்து 25லட்சம் ரூபாய் மதிப்பிலான
கஞ்சா கடத்திய நான்கு பேர்கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டனர். தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரம் கூடலூர் சாலையில் சிலர் காரில் பதுக்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. அதன் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)சந்திரா, தனிப்படை போலீசார் இ ன்ஸ்பெக்டர் டேவிட் ஆரோக்கிய ராஜ் தலைமையிலான கிழக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அப்போது , அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில்இரண்டு கார்கள் நின்றுள்ளன.போலீசார் இரண்டு கார்களில் இருந்த 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்முரணான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் சோதனையிட்டனர். அப்போது காரில் 65 பொட்டலங்களில் 136 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்,அவர்கள் மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள கம்மாகரையை சேர்ந்தர விச்சந்திரன் (44), மதுரை கூடல் நகரை சேர்ந்த சுப்ரமணி( 4 5 ) ,புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியை சேர்ந்த டேவிட் பெர்னாண்டோ( 3 0 ) , சேமங்கொட்டை பகுதியை சேர்ந்த அய்யப்பன் (29) என்பது தெரிய வந்தது.இவர்கள் 4 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனைசெய்து வருவதும், தஞ்சைக்கு அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.மேலும், கைதானவர் களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கார்களும் தமிழ்நாடு மாநில ஒரே பதிவு எண் கோண்டிருந்தது . அந்த கார்களில் பின் சீட்டில் அடியில் கஞ்சா கடத்துவதற்காக தனியாக ஒரு ரகசிய அறைகள் அமைத்துஅதில் கஞ்சாவை மறைத்து வைத்துள்ளனர். இதையடுத்து 4 பேரை யும் கைது செய்தபோலீசார், அவர்களிடமிருந்து இரண்டு கார்களையும், 5 செல் போன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், காரில் கஞ்சா கடத்தி வந்த கும்பலை கைது செய்த போலீசாரை தஞ்சை நகர டி.எ.ஸ்.பி சோமசுந்தரம் பாராட்டினார்.
சினிமாவை மிஞ்சிட்டாங்க? காருக்குள் ரகசிய அறை அமைத்து 136 கிலோ கஞ்சா கடத்தல்: தஞ்சையில் நான்கு பேர் கைது..!






