சென்னை, நவ. 10,சென்னையில் 13-ம் தேதிக்குப் பிறகுகன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னை நகரில் வெள்ளம் தேங்காமல்
தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடங்கி யுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சென்னையில் கடந்த மாதம் பெய்த மழையின் போது, சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது கண்டறியப் பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இனிவரும் நாட்களில் மழை நீர் தேங்காத வாறு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.ஒரு சில பகுதிகளில் மோட்டார் மூலம் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அங்கு மோட்டார்கள் அமைத்து மழைநீர் உடனடியாக
வெளியேற்றப்படும். இதற்காக மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் மேயர் பிரியா தகவல்






