கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிறுபான்மை முஸ்லிம் மீது வெறுப்பை விதைத்து மத நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி சிதம்பரம் லேனா தியேட்டர் அரங்கத்தில் எதிரில் எஸ்டிபி கட்சியினர் கண்டன போராட்டம் நடைபெற்றது
இதில் 50 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். …. சிதம்பரத்தில் லேனா திரையரங்கம் மற்றும் வடுகநாதன் திரையரங்கத்தில் அமரன் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது இதில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாக எஸ் டி பி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 50 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு படத்தை வெளியிட்ட கமலஹாசன் சிவகார்த்திகேயன் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது
இதில் 50-க்கும் மேற்பட்டோர் சுமார் 15 நிமிடங்களாக கோஷங்கள் எழுப்பினர் தியேட்டர் வாசலில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர் பின்பு எஸ் டி பி கட்சியினை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சங்க வைக்கப்பட்டனர் இதனால் காந்தி சிலை அருகில் உள்ள சினிமா தியேட்டரில் 15 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது






