எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களோடு தீபாவளி திருவிழா கொண்டாட்டம்!

இன்று 30.10.2024 அம்பாசமுத்திரம், சேரன் மகாதேவி, பாப்பாகுடி ஒன்றிய அளவில் எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களோடு தீபாவளி திருவிழா கொண்டாட்ட நிகழ்ச்சி சேரன்மகா தேவி C.S.I.சர்ஸ்சில் நடைபெற்றது. முக்கூடல் வட்டார மருத்துவ அலுவலர் முத்து லட்சுமி , பத்தமடை வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ், சேரை அரசு மருத்துவமனை முதுநிலை மருத்துவ அலுவலர் சாந்தி சுசீந்திரன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட அலுவலர் அமல வளவன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேற்பார்வையாளர் ஜெயகுமார், கண்டிய பேரி நம்பிக்கை மைய ஆலோசகர் மாடசாமி மற்றும் ஆய்வக நுட்பனர் மாதவன், முக்கூடல் நம்பிக்கை மைய ஆலோசகர் செல்வராஜ், கல்லூர் நம்பிக்கை மைய ஆலோசகர் மாரியம்மாள், மற்றும் ஆய்வக நுட்பனர் மோகன், கல் உக்கிரன் கோட்டை நம்பிக்கை மைய ஆலோசகர் ஸ்ரீதர், தொடர்பு திட்ட மேலாளர் சூர்யா மற்றும் ராஜன் சகுந்தலா, இந்திரா காந்தி, பீஸ் அறக்கட்டளை பெருமாள், முத்து லட்சுமி , விகான் திட்ட ரத்தின செல்வம் , கலந்து கொண்டனர். நிகழ்வு ஒருங்கிணைப்பை சேரை நம்பிக்கை மைய ஆலோசகர் மரிய செல்வம் செய்திருந்தார். நிகழவில் யோகா பயிற்சியாளர் வெங்கடேஷ் யோகா மற்றும் மூச்சு பயிற்சி வழங்கினார். மூன்று ஒன்றிய அளவில் 40 பயனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு, மதிய உணவு வழங்கப்பட்டது.