பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக பெளத்த பண்டிகையான விஜயதசமி விழா!

அனைவருக்கும் ஜெய் பீம்.

பெளத்த பேரரசர் அசோகர் காலத்தில் கலிங்க (ஒரிஸா) போரின் வெற்றிக்குப்பின் உயிரிழந்த, குற்றுயிரும், உறுப்பிழந்த போர் வீரர்களின் கதறலைக் கண்டு, மனம் மாறிய பேரரசர் அசோகர் தனது ஆயுதத்தை கீழே விட்டெரிந்தார்.

அந்த நாள்தான் விஜயதசமி என்று பெளத்த வரலாறு கூறுகிறது. அதனால்தான் அதனை இந்தியர் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

அதனை நினைவு கூர்வதற்காக, பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக பெளத்த பண்டிகையான விஜயதசமியை முன்னிட்டு நேற்று (12/10/2024) மாலை 3 மணியளவில் மாநில செயலாளர் திரு. தேவேந்திரன் தலைமையில் கே.டி.சி. நகர், நாதன் தட்டச்சு பயிலகத்தில் வைத்து நடைபெற்ற பெளத்த கூடுகைக்கு பகுஜன் சொந்தங்களான தனேஷ் செல்வன், மாவட்ட செயலாளர், அம்பை சட்டமன்ற தலைவர் ராம்குமார், அம்பை சட்டமன்ற செயலாளர் செல்வநாதன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற

பொறுப்பாளர் மாரி கணேஷ், அம்பை சட்டமன்ற பொறுப்பாளர் விஜய், மற்றும் பகுஜன் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.