மதுரை : மதுரை மாவட்டம் நாகமலைஅடிவாரத்தில் அமைந்த துவரிமான் கண்மாயில் உற்பத்தியாகிறது. இது மதுரையைக் கடந்து சிவகங்கை மாவட்டத்தின் கொந்தகை கண்மாயை அடைகிறது. பின் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழவலசை எனுமிடத்தில் குண்டாற்றில் கலக்கிறது.மதுரை மற்றும் சுற்றி உள்ள மாவட்டங்களின் விவசாயத்துக்கும் பல நூற்றாண்டு களாகப்பயன் பட்டு வந்தது கிருதுமால்நதி. மதுரையின் புராதனமானகிருதுமால் நதிக்கு நீண்ட வரலாறு உண்டு. ஆனால் இப்போது சென்னையின் கூவம்ஆற்றுக்கு ஏற்பட்ட அவலநிலையைப் போல கிருதுமால்நதிக்கும் ஏற்பட்டுள்ளது.மதுரை மாநகரில் விராட்டிபத்து, பொன்மேனி, எல்லீஸ்
நகர், தெற்குவாசல், கீரைத்துறை,சிந்தாமணி வழியாக மதுரை நகருக்குள் 15 கிலோ மீட்டர் பயணம் செய்யும் கிருதுமால்நதி, தற்போது மதுரை நகரின் பிரதான கழிவு நீர்க் கால்வாயாக
மாறி கழிவு களைச்சுமந்து ஓடுவது பெரும் வேதனை.முன்பு பாய்ந்து கொண்டிருந்தகிருதுமால் நதி, இன்று 10 அடி அகலச் சாக்கடை நீர் வடிகாலாகச் சுருங்கி விட்டது.மதுரை கீழவாசலில் வாழைத்தோப்பு வழியாகச்செல்லும் கிருதுமால் நதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
நதியின் ஒரு பகுதி சுத்தமாகவும் மறுபகுதி முழுவதும் குப்பைகளால் நிரம்பித் தேங்கி நிற்கிறது.
முற்றிலும் குப்பை கூளமாகக்காட்சியளிக்கிறது. பிளாஸ்டிக் பொருட்கள் , டப்பாக்கள்,பைகள், பீங்கான் பாட்டில்கள்,மது பாட்டில்கள் என அனைத்து மக்காத குப்பைகளும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது.தேங்கும் கழிவுகளால் மழைநேரங்களில் நோய்த் தொற்றுக்கு இப்பகுதி மக்கள் ஆளாகின்றனர்.இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், “நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் பல மாதங்களாகக் கால்வாய் அப்படியே தான் இருக்கிறது.
எந்த வித நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை.இங்கு வரும் சில பொதுமக்களும் இதைக் குப்பை கொட்டும் இடமாக நினைத்து குப்பைகளைக் கொட்டுகின்றனர். மழைக்காலம் என்பதால் இதனால் நோய் உற்பத்தியாகும் இடமாக கிருதுமால் நதி உள்ளது. குப்பைகளை அகற்றாமல் இருப்பதால், கொசு உற்பத்திஆகி, டெங்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே அரசு விரைந்து குப்பைகளை அகற்ற வேண்டும்“ என்றனர்.இது குறித்து பொதுப் பணித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “இம்மழைக் காலபேரிடர் சமயத்தில் கால்வாய்,கண்மாய் பகுதிகளில் அவசரக்கால பராமரிப்பு பணி நடந்துகொண்டிருக்கிறது. மேலும் கிருதுமால் நதி கால்வாய் பகுதியிலும் விரைவில் சீரமைக்கும்பணி தொடங்கப்பட உள்ளது.சீக்கிரமே கால்வாய் தூய்மையாகக் காணப்படும்“ என்றார்
விவசாயத்திற்கு உதவிய கிருதுமால் நதி… கழிவுநீர் ஓடையாக மாறிய அவலம்..!






